சென்னை:சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சௌபின் ஷபீர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் திரைப்படம் கூலி. பரபரவென நகரும் ஆக்ஷன் திரைப்படங்களுக்கு பெயர் பெற்ற லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்துடன் இணைவது இதுவே முதல் முறை.
அதுவும் பெரும் நட்சத்திர பட்டாளத்துடன் இணைந்துள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கூலி திரைப்படம் தொடங்கிய போது ப்ரோமோ வீடியோ வெளியானது.அதில் ரஜினியின் சண்டைக் காட்சிகள் இடம்பெற்றது. மேலும் இந்த ப்ரோமோ மூலம் இப்படம் தங்கம் கடத்தல் தொடர்பான கதை என ரசிகர்கள் தெரிவித்து வந்தனர்.
மேலும் ரசிகர்கள் கூலி திரைப்படம் தொடங்கியது முதலே இப்படம் லோகேஷின் பிரபலமான LCU யுனிவர்சில் இடம்பெறுமா என கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் இது தனிக்கதை எனவும், இப்படம் LCUவில் இடம்பெறாது எனவும் லோகேஷ் கூறியுள்ளார். மேலும் கூலி திரைப்படத்தில் அமீர்கான் நடிப்பதாகவும், அந்த காட்சிகள் தற்போது ஜெய்ப்பூரில் படமாக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது.
இதையும் படிங்க:"வதந்திகளை பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை" - விளாசிய சாய் பல்லவி!
இந்நிலையில் இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 74வது பிறந்தநாளை முன்னிட்டு கூலி படத்தின் பாடல் முன்னேட்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த பாடலை டி. ராஜேந்தர் பாடியுள்ளார். இதில் ரஜினி காந்த் குத்தாட்டம் ஆடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.தற்போது இது தொடர்பான வீடியோ வைரல் ஆகி வருகிறது.