தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நலன் குமாரசாமி, கார்த்தி கூட்டணியில் 'வா வாத்தியார்' டீசர் வெளியீடு! - VAA VAATHIYAAR TEASER

Vaa Vaathiyaar Teaser: நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியார்’ படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

வா வாத்தியார் போஸ்டர்
வா வாத்தியார் போஸ்டர் (Credits - @StudioGreen2 X account)

By ETV Bharat Entertainment Team

Published : Nov 13, 2024, 5:33 PM IST

சென்னை: கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியார்’ படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் வா வாத்தியார். இத்திரைப்படத்தில் கார்த்தி எம்ஜிஆர் ரசிகனாகவும், காவல்துறை அதிகாரியாகவும் நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் கார்த்திக்கு வில்லனாக சத்யராஜ் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. கார்த்தி முன்னதாக சிறுத்தை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களில் போலீசாக நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ‘வா வாத்தியார்’ படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: 'கங்குவா' திரைப்படம் ரிலீஸ்: பச்சைக்கொடி காட்டிய உயர் நீதிமன்றம்!

இந்த டீசரில் சத்யராஜ் அமைதிப் படை அமாவாசை கெட்டப்பில் தோன்றுகிறார். மேலும் கார்த்தி ஸ்டைலிஷ் போலீசாக உள்ளார். மேலும் சந்தோஷ் நாராயணன் இசை கவனம் பெறுகிறது. நலன் குமாரசாமி முன்னதாக சூது கவ்வும், காதலும் கடந்து போகும் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அதே போல் கார்த்தி நடித்து சமீபத்தில் வெளியான மெய்யழகன் மாபெரும் வெற்றி பெற்றது. ‘வா வாத்தியார்’ டீசர் நாளை வெளியாகவுள்ள கங்குவா திரைப்படத்துடன் இணைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது

ABOUT THE AUTHOR

...view details