தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'குட் பேட் அக்லி' ரிலீஸ் எப்போது? - 'புஷ்பா 2' நிகழ்ச்சியில் தயாரிப்பு நிறுவனம் கொடுத்த அப்டேட்! - GOOD BAD UGLY RELEASE DATE UPDATE

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் நடித்து வரும் 'குட் பேட் அக்லி' படத்தின் படப்பிடிப்பு இன்னும் 7 நாட்களே உள்ளன. படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குட் பேட் அக்லி போஸ்டர், அஜித் குமார்
குட் பேட் அக்லி போஸ்டர், அஜித் குமார் (Credits -suresh chandra X Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 24, 2024, 10:00 PM IST

சென்னை :தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவர் தற்போது விடா முயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். இதில், குட் பேட் அக்லி படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இப்படம் வரும் 2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

முன்னதாக, படத்திலிருந்து ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. அதில், அஜித் குமார் சால்ட் அண்ட் பெப்பர் தலைமுடியுடன் பிளாக் பியர்டுடன் உள்ள புகைப்படத்தை படக்குழு வெளியிட்டு இருந்தது. மேலும், இப்படத்தில் அஜித் குமார் இரண்டு அல்லது மூன்று வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க :"பாய்ஸ் சித்தார்த்.. இன்னும் லவ் படங்கள்.." - சித்தார்த்தை கலாய்த்த கார்த்தி!

இந்நிலையில், 'குட் பேட் அக்லி' படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தான் புஷ்பா 2 படத்தையும் தயாரித்துள்ளது. இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி உள்ள இப்படம் வரும் டிச 5ம் தேதி வெளியாகி உள்ளது.

இந்நிலையில், இப்படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, சென்னையில் இன்று 'Pushpa 2 Wild Fire Event' நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவன தயாரிப்பாளர்கள் கூறுகையில், "ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் நடித்து வரும் 'குட் பேட் அக்லி' படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது. இன்னும் 7 நாட்கள் படப்பிடிப்பு உள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்" என தெரிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பானது, ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், படமானது பொங்கல் பண்டிகைக்கு வெளியாகுமா? அல்லது அதன்பின்னர் வெளியிடப்படுமா என இணையத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details