தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'வாழை' படத்தின் நான்காவது சிங்கிள் வெளியானது...'பாதவத்தி' எப்படி இருக்கு? - Vaazhai paadhavathi song - VAAZHAI PAADHAVATHI SONG

Vaazhai paadhavathi song: மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலையரசன் நடிக்கும் 'வாழை' படத்தின் நான்காவது பாடலான ' பாதவத்தி' பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

paadhavathi poster, mari selvaraj
paadhavathi poster, mari selvaraj (credit - ETVBharat tamil, mari selvaraj x page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 11, 2024, 4:15 PM IST

சென்னை:இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஆகஸ்ட் 23ம் தேதி வெளியாகவுள்ள வாழை படத்தின் நான்காவது சிங்கிள் 'பாதவத்தி' வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் சமூக நீதி பேசும் திரைப்படங்கள் மூலம் முக்கிய இயக்குநராக வலம் வருபவர் மாரி செல்வராஜ்.

இவர் ஏற்கெனவே 'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்', 'மாமன்னன்' உள்ளிட்ட சமூகநீதி பேசும் திரைப்படங்களை இயக்கி உள்ளார். இப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் என்ற படத்தை இயக்கி வருகிறார். கபடி விளையாட்டு வீரரை பற்றிய படமாக உருவாகி வரும் இப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தற்போது இவர் ’வாழை’ என்ற திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார். கலையரசன் நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இதில், நிகிலா விமல், பிரியங்கா நாயர் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேனி ஈஸ்வரன் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் மாரி செல்வராஜ் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும்.

மாரி செல்வராஜின் வாழ்க்கையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் இருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளது. தற்போது பாதவத்தி என்ற பாடல் வெளியாகியுள்ளது. கிராமத்து ஒப்பாரி பாடலாக உருவாகியுள்ள இப்பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

மாரி செல்வராஜ் எழுதியுள்ள இப்பாடலை ஜெயமூர்த்தி, மீனாட்சி இளையராஜா இருவரும் இணைந்து பாடியுள்ளனர். இப்படம் இம்மாதம் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, இப்படத்திலிருந்து 'தென்கிழக்கு', 'ஒரு ஊர்ல ராஜா', 'ஒத்த சட்டி சோறு' என மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க: தனுஷ் மீதான தடைக்கு காரணம் இதுதான் - நடிகர்‌ ராதா ரவி சொன்னது என்ன? - Dhanush vs Producers Council

ABOUT THE AUTHOR

...view details