தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நாக சைதன்யா, சோபிதா பிரமாண்ட திருமணத்தில் கலந்து கொள்ளும் திரைப் பிரபலங்கள் யார் தெரியுமா?

NAGA CHAITANYA WEDDING GUESTS: இன்று ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெறும் நாக சைதன்யா, சோபிதா துலிபாலா திருமணத்தில் பல திரைப் பிரபங்கள் கலந்து கொள்கின்றனர்.

நாக சைதன்யா, சோபிதா துலிபாலா
நாக சைதன்யா, சோபிதா துலிபாலா (Credits - IANS)

By ETV Bharat Entertainment Team

Published : 19 hours ago

ஹைதராபாத்: இன்று (டிச.04) நாக சைதன்யா, சோபிதா துலிபாலா திருமணத்தில் திரைப் பிரபலங்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர். ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் நாக சைதன்யா, சோபிதா துலிபாலா திருமணம் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த திருமணத்தில் திரையுலகத்தின் உச்ச நட்சத்திரங்கள், இயக்குநர்கள், விளையாட்டுத்துறை பிரபலங்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

தென்னிந்திய சினிமா பிரபலங்கள் அல்லு அர்ஜூன் மற்றும் அவரது குடும்பத்தினர், பிரபாஸ், எஸ்.எஸ்.ராஜமௌலி, ராணா டக்குபத்தி குடும்பத்தினர், சீரஞ்சீவி மற்றும் அவரது மனைவி, அவரது குடும்பத்தை சேர்ந்த நடிகர் ராம் சரண், அவரது மனைவி உபாசனா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். அதுமட்டுமின்றி பிரபல நடிகர் மகேஷ் பாபு, நம்ரதா ஷிரோத்கர் தம்பதி நாக சைதன்யா திருமணத்தில் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நடிகர் ஜூனியர் என்டிஆர் மற்றும் அவரது மனைவி லக்‌ஷ்மி பிரனதி தம்பதி கலந்து கொள்கின்றனர். சோபிதாவின் நெருங்கிய தோழியாக கருதப்படும் நடிகை நயன்தாராவும் இன்று திருமணத்தில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. விளையாட்டுத்துறை பிரபலங்களில் பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து கலந்து கொள்கிறார். இன்று அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் பலத்த பாதுகாப்புடன் நாக சைதன்யா, சோபிதா துலிபாலா திருமணம் நடைபெறுகிறது.

இதையும் படிங்க: ”பா.ரஞ்சித் படங்களுக்கு இனி நான் தான் இசையமைப்பாளர், இது என் கட்டளை” - சந்தோஷ் நாராயணன் கலகல பேச்சு!

நாக சைதன்யா பஞ்சகச்ச உடையிலும், சோபிதா காஞ்சிவரம் சில்க் புடவையிலும் திருமணத்தில் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நாக சைதன்யாவிற்கும், நடிகை சமந்தாவிற்கும் கடந்த 2017ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்று, 2021ஆம் ஆண்டு விவாகரத்து ஆனது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details