தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

ETV Bharat / entertainment

"இசை வெளியீட்டு விழாவுக்கு பாடலாசிரியர் வருவதில்லை" - இயக்குநர் ராஜேஷ் எம் பரபரப்பு குற்றச்சாட்டு! - Seeran movie

அறிமுக இயக்குநர் முருகன் இயக்கத்தில், ஜேம்ஸ் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகும் 'சீரன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

சீரன் படக்குழுவினர்
சீரன் படக்குழுவினர் (Credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை:ஜேம்ஸ் கார்த்திக், எம்.நியாஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் K முருகன் இயக்கத்தில், ஜேம்ஸ் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் 'சீரன்'(Seeran). தன் வாழ்வில் சந்தித்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில், இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியுள்ளார் ஜேம்ஸ் கார்த்திக். மேலும் இப்படத்தை தயாரித்து, நாயகனாக நடித்துள்ளார்.

இதில் இனியா, சோனியா அகர்வால், ஆடுகளம் நரேன், அஜீத், கிரிஷா குருப், சேந்திராயன், ஆர்யன், அருந்ததி நாயர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே வேலூரைச் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளையும், மனிதனுக்கான சம உரிமைகளை உரக்கப் பேசும் ஒரு அழகான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், அக்டோபர் 4ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. உத்ரா புரடொக்சன்ஸ் சார்பில், செ.ஹரி உத்ரா இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.

இந்நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களை இயக்கிய ராஜேஷ் எம் ஆகியோர் இவ்விழாவில் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தியதோடு, படத்தின் இசை மற்றும் டிரெய்லரை வெளியிட்டனர்.

இதையும் படிங்க:இனி தோனிக்கு ’நீ பொட்டு வச்ச தங்கக் குடம்’ பாடல் தான் ஒலிக்கும்... பிரேமலதா பெருமிதம்!

சோனியா அகர்வால்:இதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சி மேடையில் நடிகை சோனியா அகர்வால் பேசியதாவது, சீரன் மிக முக்கியமான கருத்தை எடுத்துச் சொல்லும் படம். அதனால் தான் சின்ன ரோல் போதும் என நான் அதில் நடித்தேன். அனைவரும் இணைந்து நல்ல படத்தைத் தந்துள்ளோம், இனி மக்கள் தான் இந்தப் படம் எப்படி உள்ளது என்பதைச் சொல்ல வேண்டும் என்றார்.

இயக்குநர் ராஜேஷ்:பின்னர் இயக்குநர் ராஜேஷ் எம் பேசுகையில், இப்படத்தின் இயக்குநர் துரை என்னிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். அவருக்கு வாய்ப்பு தந்த ஜேம்ஸ் கார்த்திக்கிற்கு என்னுடைய நன்றிகள். என் டீமில் இருந்து ஒருவர் வந்து படமெடுப்பது மகிழ்ச்சி. துரை எப்போதும் பரபரப்பாக இருப்பார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இப்படத்தில் உள்ள பாடலாசிரியர் நிகழ்சிக்கு வந்துள்ளார். ஆனால், என்னுடைய படத்தில் பால் டப்பா என்ற அனீஷ் நான் கூப்பிட்டால் கூட இசை நிகழ்வுக்கு வரவே மாட்டார். சேது, சதுரங்க வேட்டை, அட்டகத்தி, பரியேறும் பெருமாள் போன்ற படங்கள் சின்ன பட்ஜெட்டில் சாதாரணமாக வெளியாகி, மக்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கு பிடித்ததால் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதேபோல் இந்தப் படமும் வெற்றி பெற" என் வாழ்த்துக்கள்.

இயக்குநர் துரைமுருகன்:"இந்தப் படத்தில் பணியாற்றி நடிகர்கள், நடிகைகள், டெக்னீசியன்கள், இசையமைப்பாளர்கள் என அனைவரும் சிறப்பாக பணியாற்றி உள்ளனர். ஒளிப்பதிவாளர் பாஸ்கர் ஆறுமுகம் மிகச்சிறந்த ஒத்துழைப்பு தந்துள்ளார். இந்தப் படத்தை 30 நாளில் முடிக்க இவர்கள் தான் காரணம்" என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details