தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'தலைவர் 171’ டைட்டில் டீசர் எப்போது? - லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அப்டேட்! - Thalaivar 171 title teaser - THALAIVAR 171 TITLE TEASER

THALAIVAR 171 TITLE TEASER: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ’தலைவர் 171’ படத்தின் டைட்டில் டீசர் வரும் ஏப்ரல் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 28, 2024, 6:27 PM IST

Updated : Mar 28, 2024, 7:38 PM IST

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என‌ அனைத்து படங்களும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. லியோ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள, அவரது 171வது படத்தின் டைட்டில் அறிமுக டீசர் வரும் ஏப்ரல் 22ஆம் தேதி வெளியாகும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இன்று வெளியிடப்பட்ட போஸ்டரில் ரஜினி கையில் கடிகாரங்கள் உள்ள விலங்குடன் இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் படங்கள் போதைப் பொருளை மையப்படுத்தி இருக்கும்.

அதே போல் இந்த படமும் இருக்குமா இல்லை வேறு எதாவது கதைக்களமா என ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கனவே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எந்திரன், பேட்ட, அண்ணாத்த, ஜெயிலர் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளது.

தலைவர் 171 அனிருத் இசையமைக்கவுள்ளார். மேலும் இப்படத்திற்கு அன்பறிவ் சண்டை பயிற்சியாளராக பணியாற்றவுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கும் என லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார். ரஜினிகாந்த் தற்போது டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க:நடிகர் விவேக் மகளுக்கு திருமணம்.. தந்தை வழியை பின்பற்றி நெகிழ்ச்சி! - Actor Vivek Daughter Marriage

Last Updated : Mar 28, 2024, 7:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details