சென்னை: சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி, செல்வராகவன், நட்டி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘சொர்க்கவாசல்’. இத்திரைப்படம் உண்மையை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய லோகேஷ் கனகராஜிடம் சொர்க்கவாசல், கைதி 2 ஆகிய படங்களில் அதிகமாக ஜெயில் காட்சிகள் உள்ளது. இதனால் இரண்டு படத்திற்கும் தொடர்பு உள்ளதா என்ற கேள்வி கேட்கப்பட்டது அப்போது பேசிய இயக்குநர் லோகேஷ், “நட்பின் அடிப்படையில் இன்று இந்த விழாவுக்கு வந்து உள்ளேன். ’சொர்க்கவாசல்’ படம் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். ஏனெனில் ’கைதி 2’ படத்தில் நிறைய ஜெயில் காட்சிகள் வைத்துள்ளேன். இந்த படத்தில் எவ்வாறு காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது என பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். இதனால் ’கைதி 2’ படத்தில் மாற்றம் செய்ய வேண்டி வரும் என நினைக்கிறேன்” என கூறியுள்ளார்.
இசையமைப்பாளர் அனிருத் பேசுகையில், “சித்தார்த் முதல் படம் இது. பல்லவி சிங் தான் எங்களுடைய இசை நிகழ்ச்சி, திரைப்பட ஆடை வடிவமைப்பாளர். இந்த டீம் எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள். இத்திரைப்படத்தின் இயக்குநர் சித்தார்த் எனக்கு பல்ளி ஜூனியர். சித்தார்த் துணை இயக்குநராக மூன்று படம் வேலை செய்து ’சொர்க்கவாசல்’ படத்தை இயக்கியுள்ளார். படத்தின் கதையை கதையை கூறிவிட்டு ஹீரோவாக யார் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டார்.