தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

துருவா சர்ஜா பிறந்தநாளன்று வெளியாகும் 'மார்ட்டின்' திரைப்படம்! - Martin movie Release Date - MARTIN MOVIE RELEASE DATE

நடிகர் பிரின்ஸ் துருவா சர்ஜா நடிப்பில் உருவாகி வரும் 'மார்ட்டின்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ட்டின் திரைப்படத்தின் போஸ்டர்
மார்ட்டின் திரைப்படத்தின் போஸ்டர் (Credits-vaasavi enterprise X account)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 30, 2024, 2:24 PM IST

சென்னை: கன்னட திரையுலகின் இளம் நட்சத்திர நடிகர் பிரின்ஸ் துருவா சர்ஜா நடிப்பில், பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் உருவாகி வரும் 'மார்ட்டின்' படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் பிரின்ஸ் துருவா சர்ஜா பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் இந்தியாவின் மிகப்பெரிய ஆக்சன் அதிரடியாக உருவாகி வரும் 'மார்ட்டின்' திரைப்படம் 11 அக்டோபர் 2024 அன்று உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இது குறித்து தயாரிப்பாளர் உதய் K மேத்தா கூறுகையில் 'மார்ட்டின்' ஒரு திரைப்படம் மட்டுமல்ல, இது எங்களின் கனவுப் படைப்பாகும். கன்னடத்திலிருந்து பான் இந்திய அளவில் மிகப்பெரிய ஆக்‌ஷன் வென்ச்சரை வழங்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளோம் எனவும் அந்த இலக்கை அடைவதற்கான நேரம் நெருங்கிவிட்டதாகவும் ஆக்‌ஷன் பிரின்ஸ் துருவா சர்ஜாவின் 36வது பிறந்தநாளை முன்னிட்டு, 11 அக்டோபர் 2024 அன்று உலகம் முழுவதும் பல மொழிகளில் ஒரே நேரத்தில் 'மார்ட்டின்' திரைப்படத்தை வெளியிடவுள்ளோம் எனத் தெரிவித்தார்.

வாசவி எண்டர்பிரைசஸ் மற்றும் உதய் K மேத்தா புரொடக்ஷன் நிறுவனங்களின் சார்பில், உதய் மேத்தா மற்றும் சூரஜ் உதய் மேத்தா ஆகியோர் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கன்னட திரையுலகில் இதுவரை இல்லாத வகையில் மிகப் பிரம்மாண்ட படைப்பாக 'மார்ட்டின்' படத்தைத் தயாரித்து வருகின்றனர்.

ஒட்டு மொத்த இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் 'மார்ட்டின்' படத்தினை AP.அர்ஜுன் இயக்குகிறார்.மேலும் கதை, திரைக்கதை ஆகியவற்றை ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் எழுதியுள்ளார்.படத்தை ஒளிப்பதிவாளர் சத்யா ஹெக்டே ஒளிப்பதிவு செய்கிறார். டோலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர் மணி ஷர்மா அற்புதமாக பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.கேஜிஎஃப் மற்றும் சலார் புகழ் ரவி பஸ்ரூர் பின்னணி இசையமைத்துள்ளார். நூற்றுக்கணக்கான டெக்னீஷியன்களின் உழைப்பில் வெளியாகவுள்ள ‘மார்ட்டின்’ படம் அனைத்து தரப்பினரும் கொண்டாடும் வகையில் உருவாகி வருகிறது.

இதையும் படிங்க:IMDB TOP 100; ரஜினி, விஜயை பின்னுக்குத் தள்ளிய தனுஷ்.. அஜித்குமாருக்கு எந்த இடம்? - IMDB Top 100 Indian Celebrities

ABOUT THE AUTHOR

...view details