சென்னை:சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில், தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ள 'கங்குவா' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி வெளியானது.
சூர்யா திரை வாழ்வில் அதிக பொருட்செலவில் தயாரான இத்திரைப்படம் உலகம் முழுவதும் கிட்டதட்ட 11,500 திரைகளில் வெளியானது. ரூ.2000 கோடி வசூல் அள்ளும் என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசிய நிலையில், படம் வெளியான நாள் முதலே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றது.
இந்த நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் மனைவி நேகா ஞானவேல்ராஜா, நடிகை திஷா பதானி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது. சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அப்போது திஷா பதானி குறித்த ஒரு கேள்வி, 'கங்குவா படத்தில் திஷா பதானி கவர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டார். அதனால் அவரது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை' என்று பதிலளித்ததாக கூறப்படுகிறது. ஆனால், உடனடியாக அந்த தகவலை தமது சமூக வலைதள பக்கத்தில் இருந்து நேகா ஞானவேல்ராஜா அழித்துவிட்டார் என்றும் தகவல் வெளியானது.
இதையும் படிங்க:'கங்குவா' எதிர்மறை விமர்சனங்கள் எதிரொலி: 12 நிமிட காட்சிகள் நீக்கம் எனத் தகவல்!
திஷா பதானி சர்ச்சை:இதுகுறித்து நேகா ஞானவேல்ராஜாவை தொடர்பு கொண்டு நாம் கேட்டபோது,"சமூக வலைதள கேள்வி, பதில் நிகழ்ச்சியில் பங்கேற்ற சிலர், கங்குவாவில் திஷா பதானி கதாபாத்திரம் குறித்து கேட்டார்கள். அவரது கதாபாத்திர வடிவமைப்பு சரியில்லை என்கிறார்கள்.