தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

தபேலா இசை ஜாம்பவான் ஜாகிர் உசேன் மறைவு: கமல்ஹாசன், ஏ.ஆர்.ரகுமான் இரங்கல்! - ZAKIR HUSSAIN DEATH

Zakir hussain Death: பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜாகிர் உசேன் மறைவு
ஜாகிர் உசேன் மறைவு (Photo: ANI)

By ETV Bharat Entertainment Team

Published : Dec 16, 2024, 11:46 AM IST

சென்னை: பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் உயிரிழப்பிற்கு நடிகர் கமல்ஹாசன், ஏ.ஆர்.ரகுமார் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்திய அளவில் பிரபல தபேலா இசைக் கலைஞரான ஜாகிர் உசேன் பல்வேறு மொழி திரைப்படங்கள், விளம்பரங்கள் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார். இவர் இசையமைத்த தேநீர் விளம்பரம் wah taj மிகவும் பிரபலமடைந்தது.

தபேலா இசைக் கலைஞராக மட்டுமில்லாமல் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் ஜாகிர் உசேன் நேற்று (டிச.15) அமெரிக்காவில் உள்ள சான் ஃபிரான்சிஸ்கோ மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 73 ஆகும். இந்நிலையில் புகழ்பெற்ற தபேலா இசைக் கலைஞர் மறைவிற்கு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஜாகிர் பாய், நீங்கள் எங்களை விட்டு விரைவாக சென்றுவீட்டிர்கள். அப்போதும் நீங்கள் கலைக்காக விட்டுச் சென்றுள்ளவற்றிற்கு நாங்கள் நன்றியுணர்வுடன் இருப்போம்” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: டிஜிபி ஷங்கர் ஜிவால் மகள் ஜோடி, சிவகார்த்திகேயனுக்கு வில்லன்... ஜெயம் ரவி பட கலக்கல் அப்டேட்கள்! - JAYAM RAVI IN SK25

அதேபோல் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “பலருக்கு உத்வேகத்தை அளிக்கக் கூடிய ஜாகிர் பாய், தபேலாவை உலகளவில் எடுத்துச் சென்றார். அவரது மறைவு நாம் அனைவருக்கும் பேரிழப்பு தான். பத்து வருடங்களுக்கு முன் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். ஆனால் தற்போது அவருடன் சேர்ந்து பணியாற்றவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன். அவரது குடும்பத்தாருக்கும், மாணவர்களுக்கும் அவரது இழப்பை தாங்கும் வலிமையை கொடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details