ஹைதராபாத்: ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் பலத்த மழையால் பெரும் வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலம் விஜயவாடா மற்றும் கர்ணூல் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன. அப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் ஆந்திரா மற்றும் தெலங்கானா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைப்பட துறையினர் பலர் நிதி வழங்கி வழங்கி வருகின்றனர்.
பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு தலா 50 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எனது சார்பில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ள சேதத்தின் மீட்பு பணிகளுக்கு உதவும் வகையில், ஆந்திர மற்றும் தெலங்கானா மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தலா 50 லட்சம் வழங்குகிறேன்” என்று ஜூனியர் என்டிஆர் தெரிவித்துள்ளார்.