சென்னை:தமிழ் சினிமாவில் நகைச்சுவை படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இயக்குநர் எம்.ராஜேஷ். இவர் ஏற்கனவே சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகிய படங்களை இயக்கி உள்ளார். இப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.
இந்நிலையில், தற்போது ஜெயம் ரவி நடிப்பில் பிரதர் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஜெயம் ரவிக்கு ஜோடியாக ப்ரியா மோகன் நடித்துள்ளார்.
இந்நிலையில், படத்திலிருந்து ஃப்ர்ஸ்ட் சிங்கிளான மக்காமிஷி பாடல் கடந்த 20ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்திய வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், யூடியூப்பில் 2 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இப்பாடல் வரிகளை பால் டப்பா எழுதி பாடி உள்ளார். இப்பாடலின் நடனத்தை சாண்டி கையாண்டுள்ளார்.