சென்னை: தமிழ் சினிமாவில் இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில், கடந்த 1964ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காதலிக்க நேரமில்லை. ரவிச்சந்திரன், முத்து ராமன், நாகேஷ், காஞ்சனா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து காமெடி கலந்த காதல் திரைப்படமாக இப்படம் வெளியானது.
இன்று வரையிலும் நகைச்சுவை காதல் படங்களுக்கு மிகச் சிறந்த உதாரணம் இந்தப் படம். இதே தலைப்பில் தற்போது ஒரு படம் உருவாகி வருகிறது. இதனை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்க, இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மேலும், யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, TJ பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்திற்கு லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். இதில் M.செண்பக மூர்த்தி, R.அர்ஜுன் துரை ஆகியோர் இணை தயாரிப்பாளராக படத்தை தயாரித்துள்ளனர்.