சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ’விடுதலை 2’. விடுதலை முதல் பாகத்தின் மிகப் பெரிய வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். விடுதலை 2 படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி, இளையராஜா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா பேசுகையில், ”சூரி, உங்களை கதாநாயகனாக மாற்றியது வெற்றிமாறன் தான் தற்போது எத்தனை திரைப்படங்களில் நாயகனாக நடித்திருக்கிறீர்கள் என கேட்டு, நீங்கள் காமெடி கதாபாத்திரத்தில் தானே நடித்து வந்தீர்கள், இப்போது கதாநாயகனாக நடிப்பது காமெடியா அல்லது கதாநாயகனா” என கிண்டல் செய்தார்.
அதனை தொடர்ந்து பேசிய இளையராஜா ”உங்களை போலவே நானும் படம் பார்க்க ஆவலாக காத்திருக்கிறேன். நான் தான் முதலில் படத்தை பார்ப்பேன், எனக்கு பிறகு தான் நீங்கள் படம் பார்ப்பீர்கள். படத்திற்கு நான் தான் முதல் ரசிகன், எனக்கு தானே படத்தை முதலில் காண்பிக்கிறீர்கள் என்றார்.
பின்னர் முதல் பாகத்தை பார்த்து இதே போல தான் இரண்டாம் பாகம் திரைப்படம் இருக்கும் என நினைக்காதீர்கள். விடுதலை இரண்டாம் பாகம் வேறு ஒரு பாதையை நோக்கி செல்கிறது. இந்தத் திரைப்படம் வெற்றி அடைய வேண்டும். காரணம் இப்படத்தில் அவ்வளவு உழைப்பு இருக்கிறது” எனக் கூறினார்