சென்னை: தமிழில் உச்ச நடிகராக இருக்கும் 'தளபதி 69’ படத்துடன் தனது திரைப்பயணத்தை நிறைவு செய்து கொள்வதாக அறிவித்துள்ளார். அதன்பின் முழுநேரமாக அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். அதனால் 'தளபதி 69’ படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 'தளபதி 69’ படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பிரியாமணி, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரகாஷ்ராஜ், நரேன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
தற்போது இதில் டிஜே அருணாச்சலமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது தெரியவந்துள்ளது. சுயாதீன இசைக்கலைஞரான இவர் ’அசுரன்’ மற்றும் ’பத்து தல’ போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 'தளபதி 69’ படத்தில் நடித்து வரும் மமிதா பைஜூ உடன் ஜோடியாக நடித்து வருவதாகவும் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார் டிஜே.
அஜித்தின் ’துணிவு’ திரைப்படத்திற்கு பிறகு ஹெச்.வினோத் இயக்கி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார். கே.வி.என் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.