தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ஜி.வி.பிரகாஷ் - இவானா நடிப்பில் வெளியான 'கள்வன்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு! - kalvan OTT release date - KALVAN OTT RELEASE DATE

Kalvan OTT release date: ஜி.வி.பிரகாஷ், இவானா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான கள்வன் திரைப்படம் வரும் மே 14ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

kalvan OTT release date hotstar poster
கள்வன் திரைப்பட போஸ்டர் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 11, 2024, 3:40 PM IST

சென்னை:இயக்குநர் பி.வி.ஷங்கர் இயக்கத்தில், நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில், சமீபத்தில் ‘கள்வன்’ என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் பாரதிராஜா, இவானா, தீனா மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். காடுகளின் பின்னணியில் அமைக்கப்பட்ட கதைக்களத்தில், மனதை ஈர்க்கும் சம்பவங்களுடன், கள்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதாக கருதப்படுகிறது.

அரசின் வனக்காப்பாளராக மாற விரும்பும் கொம்பன் என்பவருக்கு, அந்த வேலையில் சேர ரூ.2 லட்சம் தேவைப்படுகிறது. அந்த பணத்தை திரட்ட அவன் எடுக்கும் முடிவுகள், அவனை எதிர்பாராத பல பிரச்னைகளுக்கு இட்டுச் செல்கிறது. அதிலிருந்து அவன் விடுபட்டானா, அவன் கனவு நிறைவேறியதா என்பதே இப்படத்தின் கதையாகும். கள்வன் படத்தை ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி சார்பில் ஜி.டில்லி பாபு தயாரித்துள்ளார்.

இப்படத்தை இயக்கியதோடு, இயக்குநர் பி.வி.ஷங்கர் ஒளிப்பதிவையும் கையாண்டுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு ரேவா பின்னணி இசையமைத்துள்ளார். சான் லோகேஷ் படத்தொகுப்பையும், என்.கே.ராகுல் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளையும் செய்துள்ளனர். கள்வன் திரைப்படம் வரும் மே 14ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க:"கருப்பு எம்.ஜி.ஆர் என்று சொல்லி கோர்த்துவிடாதீர்கள்" -ராகவா லாரன்ஸ்..! - Actor Raghava Lawrence Foundation

ABOUT THE AUTHOR

...view details