சென்னை:இசை அமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் தமிழ் திரைத்துறையின் இசை அமைப்பாளர் பட்டியலில் முன்னணியில் உள்ளார். இவர் வசந்தபாலன் இயக்கிய வெயில் படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானார்.
சமீப காலமாக இவர் திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் இசையமைப்பில் தற்போது தங்கலான், வணங்கான், அமரன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், வீர தீர சூரன் உள்ளிட்ட படங்கள் வரிசையாக வெளியீட்டுக்குத் தயாராகி உள்ளன.
இவர் அவரது பள்ளித் தோழியும் தமிழ் திரைத்துறையின் பின்னணி பாடகியுமான சைந்தவியை 2013ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ள நிலையில் திடீரென கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.