சென்னை: தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநராக அறியப்படுபவர் பா.ரஞ்சித். தற்போது தங்கலான் என்ற படத்தை இவர் இயக்கியுள்ளார். கோலார் தங்க வயலில் அடிமைகளாக வேலைக்கு சேர்ந்த தமிழகர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
நாளை உலகம் முழுவதும் இப்படம் வெளியாக உள்ள நிலையில், படக்குழுவினர் விறுவிறுப்பான புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, தங்கலான் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பா.ரஞ்சித், நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன், டேனியல், பார்வதி, ஜீவி பிரகாஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர், நிகழ்ச்சியில் பேசிய ஜீவி பிரகாஷ் குமார், “எல்லா படத்துக்கும் சொல்வது போல் பெரிய உழைப்பு இப்படத்திலும் இருக்கிறது. நாம் எவ்வளவு உழைத்தாலும் அது திரையில் தெரிய வேண்டும் என்று உழைத்துள்ளனர். தங்கலான் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. தங்கலானை எனக்கு பெரிய வாய்ப்பாக பார்க்கிறேன்.
ஆயிரத்தில் ஒருவன், மதராசபட்டினம், சூரரைப்போற்று படங்களைப் போல இப்படமும் எனக்கு வாய்ப்பு. ஒரு பழங்குடியின வாழ்க்கையை இசையாகச் சொல்ல முயன்றுள்ளேன். நம் தமிழ் வாசத்துடன் கலந்து சர்வதேச அளவில் முயன்றுள்ளேன். கேட்காத சத்தங்களைச் சேகரித்து பண்ணியுள்ளேன்” என்று பேசினார்.
இதையும் படிங்க:“என் படம் சீரியஸான அரசியல் பேசினாலும் ரசிகர்கள் என்னை ஓரம்கட்டவில்லை” - பா.ரஞ்சித் பேச்சு!