தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே... 'தளபதி 69' படத்தில் இணைந்த ஸ்டைலிஷ் இயக்குநர்! - Gautham menon joins thalapathy 69 - GAUTHAM MENON JOINS THALAPATHY 69

Gautham vasudev menon joins thalapathy 69: எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்தில் கௌதம் மேனன் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தளபதி 69 படத்தில் இணைந்த கௌதம் மேனன்
தளபதி 69 படத்தில் இணைந்த கௌதம் மேனன் (Credits - ETV Bharat Tamil Nadu, @KvnProductions X account)

By ETV Bharat Entertainment Team

Published : Oct 3, 2024, 1:01 PM IST

சென்னை: கேவின் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் விஜய் தனது 69வது படத்தில் நடிக்கவுள்ளார். விஜய், ’தமிழக வெற்றிக கழகம்’ என்ற அரசியல் கட்சி தொடங்கியுள்ளதால் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதன் காரணமாக தற்போது எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளது தனது கடைசி படம் என தெரிவித்துள்ளார்.

சமூக பிரச்சனைகளை தனக்கே உரித்தான பாணியில் கூறும் எச்.வினோத்துடன் விஜய் தனது கடைசி படத்தில் நடிக்கவுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் அரசியல் ரீதியாக இருக்குமா அல்லது எச்.வினோத்தின் சீரியஸான கதையாக இருக்குமா என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கும் நிலையில், பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா ஃபைஜூ ஆகியோர் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. பிரேமலு திரைப்படம் மூலம் இளைஞர்கள் மனதை கொள்ளையடித்த மமிதா ஃபைஜூ விஜய்யுடன் நடிப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: "நடிகை சமந்தா விவகாரத்திற்கு மாஜி முதல்வர் மகனே காரணம்" பெண் அமைச்சர் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டாவில் பொங்கி எழுந்த சமந்தா! - Samantha about divorce issue

இந்நிலையில் இன்று படக்குழு மேலும் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்பரைஸ் கொடுத்துள்ளது. இயக்குநரும், நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் தளபதி 69இல் நடிக்கிறார் என படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே லியோ படத்தில் விஜய்யுடன் கௌதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ’தளபதி 69’ படத்தின் படப்பிடிப்பு நாளை (அக்.04) தொடங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details