சென்னை:தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தொடர்ச்சியாக படங்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் பொங்கல் பண்டிகைக்கு சிவகார்த்திகேயனின் நடித்த அயலான், தனுஷ் நடித்த கேப்டன் மில்லர், விஜய் சேதுபதி நடிப்பில் மெரி கிறிஸ்துமஸ் ஆகிய படங்கள் வெளியானது.
அதனைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்த லால்சலாம், ஜெயம் ரவி நடித்த சைரன் படம் உள்ளிட்ட திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்த வாரம் 8 படங்கள் வெளியாகிறது, இவை அனைத்துமே சிறிய பட்ஜெட் படங்கள். இதில் இளையராஜா இசையில் உருவாகியுள்ள நினைவெல்லாம் நீயடா, வைபவ் நடிப்பில் ரணம், சதீஷ் நடிப்பில் வித்தைக்காரன் உள்ளிட்ட 8 படங்கள் வெளியாகிறது, இது குறித்த சிறிய தொகுப்பை இதில் காண்போம்.
ரணம்:அறிமுக இயக்குநர் ஷெரீஃப் இயக்கத்தில் வைபவ், தான்யா ஹோப், நந்திதா ஸ்வேதா, சரஸ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் 'ரணம் அறம் தவறேல்'. அரோல் கரோலி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பாலாஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மது நாகராஜ் தயாரித்திருக்கும் இந்தப் படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
வித்தைக்காரன்:ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் (White Carpet Films) சார்பில், K.விஜய் பாண்டி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வெங்கி இயக்கத்தில், நகைச்சுவை நடிகர் சதீஷ் நாயகனாக நடிக்கும் வித்தியாசமான ஹெய்ஸ்ட் திரைப்படம் “வித்தைக்காரன்”.