தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

தங்கலான் கெட்டப்பில் தியேட்டருக்கு வந்து அலப்பறை.. மறுத்த திருச்சி திரையரங்கம்! - vikram fans in thangalaan costume - VIKRAM FANS IN THANGALAAN COSTUME

Vikram fans in thangalaan costume: திருச்சியில் விக்ரம் நடிப்பில் தங்கலான் திரைப்படம் வெளியான நிலையில், விக்ரம் ரசிகர்கள் சிலர் படத்தில் இடம்பெற்றுள்ள விக்ரம் கதாபாத்திரம் போன்று வேடம் அணிந்து வந்திருந்தனர்.

திருச்சியில் தங்கலான் கெட்டப்பில் தியேட்டருக்கு வந்த ரசிகர்கள்
திருச்சியில் தங்கலான் கெட்டப்பில் தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 15, 2024, 4:07 PM IST

திருச்சி:இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஞானவேல்ராஜா தயாரிப்பில், G.V.பிரகாஷ் குமார் இசையில், விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தங்கலான்'. இத்திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

திருச்சியில் தங்கலான் கெட்டப்பில் தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

சுதந்திரத்திற்கு முன்னதாக கோலார் தங்கச் சுரங்கத்தில் மக்கள் சந்தித்த பிரச்னைகளை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. காலை முதல் ரசிகர்கள் திரையரங்கில் குவிந்து வரும் சூழலில், தங்கலான் படம் நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

தங்கலான் படம் பார்த்த ரசிகர்கள் பலர் விக்ரமின் நடிப்பை பாராட்டி வருகின்றனர். குறிப்பாக, விக்ரம் நடிகர் கமலையே மிஞ்சும் அளவிற்கு நடித்துள்ளார் என்றும் பாராட்டியுள்ளனர். இந்நிலையில், திருச்சி தெப்பக்குளம் அருகே உள்ள ஒரு தனியார் திரையரங்கில் தங்கலான் திரைப்படம் இன்று வெளியானது. இதனை ஒட்டி, ரசிகர்கள் சிலர், தங்கலான் படத்தில் விக்ரம் கதாபாத்திரம் போன்று வேடம் அணிந்து திரையரங்கிற்கு வந்திருந்தனர். அவர்களுடன் ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, திரையரங்க நிர்வாகம் சார்பில் மேலாடை அணியாமல் உள்ளே வரக்கூடாது என விக்ரம் ரசிகர்களை தடுத்து நிறுத்தி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ரசிகர்கள் மேலாடை அணிந்த பின்பு திரையரங்கிற்குள் படம் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (திருச்சியில் தங்கலான் கெட்டப்பில் தியேட்டருக்கு வந்த ரசிகர்கள்)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: கொல்கத்தா பெண் மருத்துவர் விவகாரம்; நடிகைகள் சமந்தா, ஆலியா பட் கடும் கண்டனம்! - Kolkata doctor murder case

ABOUT THE AUTHOR

...view details