தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"17 வருட திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்கிறோம்" - இயக்குநர் சீனு ராமசாமி மனைவியுடன் விவாகரத்து! - SEENU RAMASAMY DIVORCE

Seenu ramasamy Divorce: பிரபல இயக்குநர் சீனு ராமசாமி தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் சீனு ராமசாமி
இயக்குநர் சீனு ராமசாமி (Credits - IANS)

By ETV Bharat Entertainment Team

Published : Dec 12, 2024, 11:07 AM IST

சென்னை: இயக்குநர் சீனு ராமசாமி தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார். பிரபல இயக்குநர் சீனு ராமசாமி தனது மனைவியுடனான 17 வருட திருமண வாழ்வை முடித்து கொள்வதாக அறிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அன்பானவர்களுக்கு வணக்கம், நானும் எனது மனைவி GS தர்ஷனாவும் எங்கள் 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம்.

இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவர் அவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும் அந்த பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும் எனது செயல்பாடுகள் அவரையும் எவ்விதத்திலும் சேராது, பொறுப்பாகாது என்பதை நான் அறிவேன்.அவரும் அறிவார். இப்பிரிவுக்கு உதவும் படி சென்னை உயர்நீதி மன்றத்தை நாடியுள்ளோம். இருவரின் தனிப்பட்ட இந்த முடிவுக்கும், அதன் உரிமைக்கு மதிப்பளிக்கும் தங்களின் வாழ்த்துக்கள் எங்களுக்கு ஊக்கம்” என பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனு ராமசாமி சமீபத்தில் இயக்கிய ’கோழிப்பண்ணை செல்லத்துரை’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், பல்வேறு நாடுகளில் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டை பெற்றது.

இதையும் படிங்க: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள்: விஜய், கமல்ஹாசன் ஆகியோர் வாழ்த்து!

முன்னதாக சீனு ராமசாமி நீர்ப்பறவை, தர்மதுரை ஆகிய ஹிட் திரைப்படங்களை இயக்கியுள்ளார். தமிழ் சினிமாவில் இந்த வருடம் பல திரை பிரபலங்கள் தங்களது வாழ்வில் விவாகரத்து முடிவை எடுத்துள்ளனர். ஜிவி பிரகாஷ் சைந்தவி, நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தி, ஏ.ஆர்.ரகுமான் சாய்ரா பானு வரிசையில் தற்போது இயக்குநர் சீனு ராமசாமி இணைந்துள்ளது ரசிகர்களி இடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details