தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"எனக்கே தெரியாமல் ஒரு நிமிட காட்சிகள் சேர்ப்பு" - 'மழை பிடிக்காத மனிதன்' பட இயக்குநர் விஜய் மில்டன் வேதனை! - Mazhai pidikkadha manithan - MAZHAI PIDIKKADHA MANITHAN

Mazhai pidikkadha manithan: விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள 'மழை பிடிக்காத மனிதன்' படத்தில் தனது அனுமதி இல்லாமல் 1 நிமிட காட்சி சேர்க்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் அப்படத்தின் இயக்குநர் விஜய் மில்டன் புகார் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் விஜய் மில்டன் புகார்
இயக்குநர் விஜய் மில்டன் புகார் (Credits - Film posters, ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 3, 2024, 12:44 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான விஜய் மில்டன் கடந்த 1998ஆம் ஆண்டு முதல் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஒளிப்பதிவு செய்த ஆட்டோகிராஃப், காதல், வழக்கு எண் 18/9 உள்ளிட்ட பல படங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இயக்குநர் விஜய் மில்டன் புகார் வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

மேலும் இவர் இயக்கத்தில் வெளியான கோலி சோடா, 10 எண்றதுக்குள்ள ஆகிய படங்கள் வரவேற்பைப் பெற்றது. இதனைத்தொடர்ந்து விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மழை பிடிக்காத மனிதன்'. இதில் விஜய் ஆண்டனி உடன் சத்யராஜ், சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நேற்று (ஆகஸ்ட் 2) திரைக்கு வந்துள்ள இப்படத்தில் இயக்குநர் விஜய் மில்டனின் அனுமதி இல்லாமலேயே தொடக்கத்தில் ஒரு நிமிட காட்சி சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் வீடியோ மூலமாக குற்றம் சாட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் "பத்திரிக்கையாளர்களோடு படம் பார்க்கையில் எனக்கு தெரியாமல் படத்தின் ஆரம்பத்தில் சேர்க்கப்பட்டுள்ள அந்த ஒரு நிமிட காட்சியை பார்த்ததும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானது.

யார் இதை படத்தில் அந்த காட்சிகளை சேர்த்தார்கள் என தெரியவில்லை, அதனால் கதையில் உள்ள சஸ்பென்ஸ் ஆடியன்ஸுக்கு கிடைக்கவில்லை. மேலும் ஒரு படத்தின் சென்சார் முடிந்தும் எப்படி அந்த ஒரு நிமிட காட்சி சேர்க்கப்பட்டது என தெரியவில்லை" என கவலை தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: விஜய் தேவரகொண்டாவின் 'VD 12' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு! - vd 12 new movie released on mar 28

ABOUT THE AUTHOR

...view details