தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ஆஹா..! 'கோட்' படத்தின் அந்த காட்சிகள்... புதிய அப்டேட்டை பகிர்ந்த இயக்குனர் வெங்கட் பிரபு - goat movie update - GOAT MOVIE UPDATE

Vijay's GOAT VFX update: விஜய் நடிப்பில் உருவாகிவரும் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' திரைப்படம் குறித்த சூப்பர் அப்டேட்டை பகிர்ந்துள்ளார் அப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு.

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்ட் பிரபு
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்ட் பிரபு (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 18, 2024, 11:52 AM IST

சென்னை: விஜய் நடிப்பில் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படம் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல்ரீதியாக வெற்றிகரமான படமாக அமைந்தது.

இந்த நிலையில், தற்போது விஜய் 'தி கோட்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். விஜய்க்கு ஜோடியாக சிங்கப்பூர் சலூன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான மீனாட்சி சவுத்ரி இந்த படத்தில் நடத்துள்ளார். நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

விசில் போடு: இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இதில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் என கூறப்படுகிறது. இதன் விஎஃப்எக்ஸ் காட்சிகள் மிகவும் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் இந்த படத்தின் 'விசில் போடு' பாடல் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

ரஷ்யாவில் படத்தின் பல்வேறு காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. கதையில் முக்கியத் திருப்பங்களை கொண்டு வரும் காட்சிகள் ரஷ்யாவில் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் படம் குறித்தான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வெங்கட் பிரபு ஆர்வம்: அதில் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' திரைப்படத்தின் நடிகர் விஜய் சம்பந்தப்பட்ட விஎஃப்எக்ஸ் (VFX) காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டதாகவும் அதன் முழு வடிவத்தை பார்க்க ஆர்வமாக இருப்பதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். கிராஃபிக்ஸ் பணிகள் இப்படத்திற்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இதில் இளம் வயது விஜய் வில்லனாக இருப்பார் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கோட் திரைப்படம் இந்தாண்டு செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கோட் படத்தில் விஜயுடன் நடிக்க மறுத்த குண்டூர் காரம் நடிகை ஸ்ரீ லீலா! என்ன காரணம் தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details