தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"வேள்பாரி நாவலின் காட்சிகளை அனுமதியின்றி படமாக்குவதா?" - இயக்குநர் ஷங்கர் எச்சரிக்கை! - velpari novel copy right issue

வேள்பாரி நாவலில் வரும் சம்பவங்கள் வெவ்வேறு படங்களில் காட்சிகளாக வைக்கப்படுவது வருத்தமளிக்கிறது எனவும், அனுமதியின்றி நாவலின் காட்சிகளை படமாக்காதீர்கள். மீறினால் சட்ட நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என இயக்குநர் ஷங்கர் எச்சரித்துள்ளார்.

இயக்குநர் ஷங்கர்
இயக்குநர் ஷங்கர் (Credits - Shankar Shanmugham X Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 22, 2024, 7:18 PM IST

சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் ஷங்கர். இவரது இயக்கத்தில் சமீபத்தில் இந்தியன் 2 படம் வெளியானது. இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பரவலான வெற்றியை பெற்றது. இந்நிலையில், இயக்குநர் ஷங்கர் தற்போது கேம் சேஞ்சர் மற்றும் இந்தியன் 3 படத்தில் பிஸியாக உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இந்தாண்டு இறுதிக்குள் முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "சு.வெங்கடேசனின் 'வீரயுக நாயகன் வேள்பாரி' நாவலின் காப்புரிமையை கொண்டுள்ளவன் என்ற முறையில் அந்த நாவலில் வரும் சம்பவங்கள் வெவ்வேறு படங்களில் காட்சிகளாக வைக்கப்படுவது வருத்தமளிக்கிறது.

இதையும் படிங்க :'பயம்னா என்னணு தெரியணும்னா தேவரா கதையை கேட்கணும்'.. வெளியானது தேவரா -1 ட்ரெய்லர்!

சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெய்லர் ஒன்றில் அந்த நாவலின் முக்கிய காட்சி பயன்படுத்தப்பட்டுள்ளது மிகுந்த வேதனையை தருகிறது. இத்தகையை விஷயங்களை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். படைப்பாளிகளின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். அனுமதியின்றி நாவலின் காட்சிகளை படமாக்காதீர்கள். மீறினால் சட்ட நடவடிக்கையை சந்திக்க நேரிடும்" என்று பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் ஷங்கர் கூறிய படத்தின் டிரெய்லர் எதுவென இணையத்தில் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details