சென்னை: தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனரான ஷங்கர், ஜென்டில்மேன் தொடங்கி இந்தியன், முதல்வன், சிவாஜி என சமீபத்தில் வெளியான இந்தியன் 2 வரை பல்வேறு திரைப்படங்களை இயக்கியுள்ளார். இயக்குநர் ஷங்கர் திரைப்படத்தின் கதைக்களம் பெரும்பாலும் ஊழல் ஒழிப்பு பற்றி தான் இருக்கும். மேலும் ஷங்கர் படங்களில் பாடல் காட்சிகள் பிரமாண்டமான முறையில் இருக்கும். இயக்குநர் ஷங்கர் ரஜினி, கமல், விஜய் என முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ளார்.
அதே நேரத்தில் ஷங்கரின் சமீபத்திய படமான இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இதனால் இயக்குநர் ஷங்கர் மனதளவில் வருத்தத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இயக்குநர் ஷங்கர் தெலுங்கில் ராம் சரணை வைத்து 'கேம் சேஞ்சர்' மற்றும் இந்தியன் 3 பட வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். மேலும் எழுத்தாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் எழுதிய 'நவயுக நாயகன் வேள்பாரி' நாவலின் காப்புரிமையை இயக்குநர் ஷங்கர் பெற்றுள்ளார். அந்த நாவலை படமாக்கும் பணிகளை இயக்குநர் ஷங்கர் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்று இயக்குநர் ஷங்கர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சு.வெங்கடேசனின் 'நவயுக நாயகன் வேள்பாரி' நாவலின் காப்புரிமைக்கு சொந்தமானவர் என்ற முறையில் அந்த நாவலில் வரும் சம்பவங்கள் வெவ்வேறு படங்களில் காட்சிகளாக வைக்கப்படுவது வருத்தமளிக்கிறது. சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெய்லர் ஒன்றில் அந்த நாவலின் முக்கிய காட்சி பயன்படுத்தப்பட்டுள்ளது மிகுந்த வேதனையைத் தருகிறது. இத்தகையை விஷயங்களை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.