தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

’இந்தியன் 2’ நெகடிவ் விமர்சனங்கள்... மனம் திறந்த இயக்குநர் ஷங்கர்! - SHANKAR ABOUT INDIAN 2 REVIEWS

Shankar about indian 2 negative reviews: கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 படத்திற்கு இந்தளவிற்கு நெகடிவ் விமர்சனங்கள் எதிர்பார்க்கவில்லை என இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார்.

இந்தியன் 2 நெகடிவ் விமர்சனம் குறித்து பேசிய ஷங்கர்
இந்தியன் 2 நெகடிவ் விமர்சனம் குறித்து பேசிய ஷங்கர் (Credits - Film Posters, ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Entertainment Team

Published : 6 hours ago

சென்னை: ’இந்தியன் 2’ திரைப்படத்திற்கு எதிர்மறை விமர்சங்களை எதிர்பார்க்கவில்லை என இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார். வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தில் ராஜூ தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘கேம் சேஞ்சர்’ (Game changer). தமன் இசையமைத்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகிறது.

தமிழில் பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். கேம் சேஞ்சர் படத்தின் பாடல் 'ரா மச்சா மச்சா' ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் கேம் சேஞ்சர் ப்ரமோஷன் வேலைகளில் படக்குழு இறங்கியுள்ளது. தனியார் நாளிதழுக்கு இயக்குநர் ஷங்கர் அளித்த பேட்டியில் கேம் சேஞ்சர் குறித்தும் ’இந்தியன் 2’ திரைப்படம் குறித்தும் பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது, “கேம் சேஞ்சர் படத்தில் ராம்சரண் அரசு அதிகாரியாகவும், எஸ்.ஜே.சூர்யா அரசியல்வாதியாகவும் நடித்துள்ளனர். இது ராம்சரணுக்கு ஒரு லைஃப் டைம் கேரக்டர். நல்ல திரைக்கதையுடன் ஒரு மாஸ் கமர்ஷியல் திரைப்படமாக வந்துள்ளது” எனக் கூறியுள்ளார்.

மேலும் ’இந்தியன் 2’ திரைப்படத்திற்கு கிடைத்த நெகடிவ் விமர்சனங்கள் குறித்து பேசுகையில், “இந்தியன் 2 திரைப்படத்திற்கு இந்தளவு நெகடிவ் விமர்சனங்கள கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. இந்தியன் 3 திரைப்படம் ஓடிடியில் வெளியாவதாக வந்த தகவல் உண்மையில்லை. கண்டிப்பாக இந்தியன் 3 தியேட்டர்களில் தான் வெளியாகும். இந்தியன் 3 திரைப்படத்தை நன்றாக உருவாக்கி வெளியிடுவேன்” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 2024இல் இளைஞர்களை வைப் செய்ய வைத்த சிறந்த ஆல்பம் பாடல்கள்! - BEST ALBUMS 2024

கடந்த ஜூன் மாதம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் கடும் விமர்சனங்களை சந்தித்தது. சமூக வலைதளங்களில் பலர் மீம்ஸ் பதிவிட்டனர். அதேபோல் பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக வெளியான கங்குவா திரைப்படத்தையும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். இந்த ஆண்டு வெளியான தமிழ்ப் படங்களில் இந்தியன் 2, கங்குவா மோசமான திரைப்படங்கள் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சேனாபதியின் முன்கதையாக இந்தியன் 3 திரைப்படம் பெரும் பொருட்செலவில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details