சென்னை: தமிழ் சினிமாவில் சமூக நீதி கருத்துக்களை தன் படங்களின் மையக்கருவாக கொண்டு பல்வேறு படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். அட்டக்கத்தி படத்தில் தொடங்கி மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை என பா.ரஞ்சித் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் பா.ரங்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்ட பலர் நடித்த ‘தங்கலான்’ திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், நல்ல வசூலையும் பெற்று வருகிறது.
இந்நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித் ரசிகர்கள் மத்தியில் தனது படத்திற்கு கிடைத்த வரவேற்பு குறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, “விமர்சன ரீதியாக பல படங்கள் சரியில்லை என கூறப்பட்டாலும், வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது.
ரஜினிகாந்த் நடித்த அனைத்து படங்களும் வெற்றி என ரசிகர்கள் கொண்டாடினாலும், நான் ரஜினியை வைத்து இயக்கிய கபாலி, காலா படங்களை மட்டும் சமூக வலைத்தளங்களில் ஏன் தோல்விப்படம் என்கின்றனர். கபாலி படம் வசூல் ரீதியாக தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய லாபத்தைக் கொடுத்துள்ளது. அப்போது அது வெற்றி படம் தானே? காலா படம் ரஜினி ரசிகர்களுக்கு திருப்திகரமாக இல்லை.