திருநெல்வேலி: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் “வாழை”. மாரி செல்வராஜ் தயாரித்துள்ள முதல் திரைப்படம் வாழை ஆகும். இப்படம் இன்று (ஆகஸ்ட் 23) தமிழ்நாடு முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் திருநெல்வேலி, ராம் சினிமாஸ் திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் இயக்குநர் மாரி செல்வராஜ் கண்டுகளித்தார்.
முன்னதாக, வாழை திரைப்படம் வெளியாகி உள்ள ராம் சினிமாஸ் திரை அரங்கினை வாழைமரம் கொண்டு இயக்குநர் மாரி செல்வராஜ் நற்பணி மன்றத்தினர் அலங்கரித்தனர். அதேபோல், வாழை திரைப்படம் பார்க்க வந்த அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திரையரங்கிற்கு வந்த இயக்குநர் மாரி செல்வராஜிற்கு பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்தனர்.