சென்னை: சென்னையில் கூகை திரைப்பட இயக்கம் சார்பில் நடைபெற்ற ஒருங்கிணைந்த திரைமொழி கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது படங்கள் குறித்து கலந்துரையாடினார். அப்போது சினிமாவில் கரியரை தொடங்குவது குறித்த கேள்விக்கு, "நான் நான்கு, ஐந்து குறும்படங்கள் இயக்கியுள்ளேன். அதனை போட்டு காட்டும் போது பார்வையாளர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பது தான் முக்கியம்.
கைதி திரைப்படம் முடித்த போது மாஸ்டர் பட வாய்ப்பு வந்தது. அதனை மறுத்திருந்தால் நான் சினிமாவில் தற்போது வேறு இடத்தில் இருந்திருப்பேன். நான் வாய்ப்பை மிஸ் பண்ண வேண்டாம் என ஏற்றுக் கொண்டேன்" என்றார். இதனைத்தொடர்ந்து முழுக்க முழுக்க காதல் படம் இயக்குவீர்களா என்ற கேள்விக்கு, “5 ஆண்டுகளுக்கு வாய்ப்பு இல்லை. இப்போதைக்கு LCU படங்களை எடுத்து முடிக்கணும்” என கூறினார்.
இதனைத்தொடர்ந்து தனது LCU யுனிவர்ஸ் பற்றி லோகேஷ் கனகராஜ் பேசுகையில், “கூலி திரைப்படம் LCU யுனிவர்ஸில் வராது. LCU யுனிவர்ஸ் உருவாகிவிட்டதால் அதனை சரியாக முடிக்க வேண்டும். நான் ’கூலி’ திரைப்படத்திற்கு பிறகு ’கைதி 2’ திரைப்படத்தை இயக்கவுள்ளேன். அதில் LCU யுனிவர்ஸில் உள்ள அனைத்து நடிகர்களும் இடம் பெறுவர்.