தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"ஆர்.எம்.வீரப்பனை அழித்துவிட்டு திராவிட இயக்கத்தின் வரலாற்றை எழுத முடியாது" - இயக்குநர் ஏ.எல்.விஜய்! - AL VIJAY ABOUT RM VEERAPPAN - AL VIJAY ABOUT RM VEERAPPAN

RM Veerappan: திராவிட அரசியலை தொட்டாலும், தமிழ் திரையுலக வரலாற்றை அலசினாலும் மறைந்த ஆர்.எம் வீரப்பன் இல்லாத வார்த்தைகளை தொகுக்கவே முடியாது என மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் 'தலைவி' படத்தை இயக்கிய இயக்குநர் ஏ.எல்.விஜய், ஆர்.எம் வீரப்பனின் நினைவுகளை ஈடிவி பாரத் ஊடகத்திற்கு பகிர்ந்து கொண்டார்.

Politician RM Veerappan
Politician RM Veerappan

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 10, 2024, 1:45 PM IST

Politician RM Veerappan

சென்னை:தமிழ்நாட்டின் அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கிய முன்னாள் அமைச்சரும், திரைப்பட இயக்குநருமான ஆர்.எம்.வீரப்பன், வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். அவரது உடல் இன்று மாலை தகனம் செய்யப்படவுள்ள நிலையில், தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அரசியல் பிரமுகர்கள், திரைப் பிரபலங்கள் என பலரும் ஆர்.எம்.வீரப்பனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பின்னணியாகக் கொண்டு ’தலைவி’ என்ற படத்தை இயக்கிய இயக்குநர் ஏ.எல்.விஜய், ஆர்.எம்.வீரப்பன் பற்றிய தனது நினைவலைகளை, ஈடிவி பாரத் ஊடகத்திற்கு தொலைபேசி வாயிலாக பகிர்ந்து கொண்டார்.

இயக்குநர் விஜய் இயக்கிய 'தலைவி' படத்தில் ஆர்.எம்.வீரப்பன் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் ஏ.எல் விஜய் நினைவுகளை பகிர்கையில், “ஆர்.எம்.வீரப்பனுடன் எனக்கு நேரடி பழக்கம் கிடையாது. 'தலைவி' படம் எடுக்கும் போது அவரைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. திராவிட இயக்கத்தைப் பொறுத்தவரையில், அவரை அழித்து விட்டு வரலாறு எழுத முடியாது. அதில் மிகப்பெரிய பங்கு அவருக்கு உள்ளது. அதிமுகவின் அடிப்படை கட்டமைப்பை ஆர்.எம்.வீரப்பன் தான் நிர்வகித்து வந்தார்.

எம்.ஜி.ஆரின் மிகப்பெரிய தூணாக அவர் விளங்கினார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எம்.ஜி.ஆரின் ஆட்சி எவ்வளவு முக்கியமானதாக இருந்ததோ, அதே நேரத்தில் இவருடைய பங்களிப்பும் முக்கியமானதாக இருந்தது. மிகப்பெரிய தலைவரை இழந்துள்ளோம். கலைத்துறையைப் பொறுத்தவரையில், அவரது பங்களிப்பு மிகவும் பெரியது. 'உலகம் சுற்றும் வாலிபன்' படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இப்போது இருக்கிற தொழில்நுட்பத்தில் படம் எடுப்பது மிகவும் சுலபம், ஆனால் அப்போதே வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்தியுள்ளார்.

அவர், மிகப்பெரிய திறமைசாலி மற்றும் கலைத்துறையை பொறுத்தவரையில் மிகப்பெரிய பொக்கிஷம். தரமான படங்களை தமிழ் திரைத்துறையினருக்கு கொடுத்துள்ளார். அவரது இழப்பு தமிழ் சினிமாவுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் மிகப்பெரிய இழப்பு” என்றார். 'தலைவி' படத்திற்காக அவரை நேரில் சந்தித்துப் பேச வாய்ப்புகள் கிடைத்ததா என எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தவர், “தலைவி படம் எடுக்கும் போது வீரப்பன் உடல்நலக்குறைவால் ஓய்விலிருந்தார். அதனால், அவரைச் சந்தித்துப் பேச முடியவில்லை. ஆனால், அவரது 'தொண்டன்' புத்தகத்தைப் படிக்கும் போது, அவர் மீது மிகப்பெரிய மரியாதை ஏற்பட்டது‌” என்றார்.

'தலைவி' படத்தில் வீரப்பன் கதாபாத்திரத்தில் நடித்த சமுத்திரக்கனி எவ்வாறு தயார் ஆனார் என்ற கேள்விக்குப் பதிலளித்தவர், “முதலாவதாக தொண்டன் புத்தகத்தை கொடுத்து படிக்கச் சொன்னேன். இருப்பினும், சமுத்திரக்கனிக்கு வீரப்பன் குறித்த தகவல்களும், புரிதல்களும் அதிகம் உண்டு. அவரைப் பற்றி படம் எடுக்கும் போது, இது எவ்வளவு பெரிய ஆழமான விஷயம் என்று தெரிந்தது. எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ், தமிழ்நாடு மற்றும் தமிழ்நாடு அரசிற்கும் இவர் எவ்வளவு முக்கியமான ஆள் என்பது தெரிந்தது. இவரது இறப்புச் செய்தியைக் கேட்கையில், மிகவும் வருத்தமாக இருந்தது. அவர், மிகவும் நேர்மையான மனிதர், அரசியலில் அப்பழுக்கு அற்றவர் ஆர்.எம் வீரப்பன்” என்றார்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆரின் வலதுகரம்.. ஆர்.எம்.வீரப்பன் கடந்து வந்த பாதைகள்! - RM VEERAPPAN History

ABOUT THE AUTHOR

...view details