தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நயன்தாரா 'நானும் ரௌடி தான்' பட காப்புரிமை விவகாரம்... நோட்டீஸ் அனுப்பிய தனுஷ் வழக்கறிஞர் கூறுவது என்ன? - NAYANTHARA VS DHANUSH

நயன்தாரா, தனுஷ் நானும் ரௌடி தான் பட காப்புரிமை பிரச்சனை தொடர்பாக நோட்டிஸ் அனுப்பிய வழக்கறிஞர் நமது ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசியுள்ளார்

நயன்தாரா அறிக்கை
நயன்தாரா அறிக்கை (Credits - nayanthara Instagram Account)

By ETV Bharat Entertainment Team

Published : Nov 16, 2024, 5:28 PM IST

சென்னை: நடிகை நயன்தாரா தனுஷ் மீது குற்றம் சுமத்தி இன்று அறிக்கை வெளியிட்டார். தனுஷுக்கு சொந்தமான ’வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான படம் ‘நானும் ரௌடி தான்’. இப்படத்தின் படப்பிடிப்பில் விக்னேஷ் சிவன், நயன்தாரா இடையே காதல் மலர்ந்தது.

இதனையடுத்து இருவரும் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு உயிர், உலகு என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நயன்தாரா வாழ்க்கை வரலாறு ஆவணப்படம் அவரது பிறந்தநாளான நவம்பர் 18ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது. இந்த ஆவணப்பட டிரெய்லரில் நானும் ரௌடி தான் படத்திலிருந்து சில காட்சிகள் 3 விநாடிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. இதனையடுத்து தனுஷ் தரப்பில் 10 கோடி கேட்டு நயன்தாராவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து இன்று நயன்தாரா அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கை கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் செயல் தனக்கும், தனது கணவருக்கும் மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்துவதாகவும், கீழ்தரமான இந்த செயல், ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க:விக்னேஷ் சிவன் ’LIC’ படத் தலைப்பை பயன்படுத்தியது நியாயமா?... நயன்தாராவுக்கு பிரபல இசையமைப்பாளர் பதிலடி!

மேலும் தனுஷின் நோட்டிஸை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் எனவும் கூறியுள்ளார். இந்நிலையில் நமது ஈடிவி பாரத் செய்தியாளர் தனுஷ் தரப்பு வழக்கறிஞர் அருண் என்பவரை தொடர்பு கொண்டு இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளார். அப்போது அவர், “நயன்தாரா அறிக்கை தொடர்பாக எந்தவித விளக்கமாக இருந்தாலும் ’வுண்டர்பார் நிறுவனம்’ தான் முறையாக அளிப்பார்கள். எங்களால் எதுவும் கூற முடியாது” என கூறியுள்ளார். இந்த நயன்தாரா, தனுஷ் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details