தமிழ்நாடு

tamil nadu

தனுஷ் இயக்கத்தில் இளைஞர்கள் பட்டாளம் நடித்துள்ள 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' முதல் சிங்கிள் வெளியீடு! - nilavukku enmel ennadi kobam

By ETV Bharat Entertainment Team

Published : Aug 30, 2024, 7:52 PM IST

Nilavukku enmel ennadi kobam first single: தனுஷ் இயக்கத்தில் ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையில் உருவாகியுள்ள 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தில் முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது.

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் போஸ்டர்
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் போஸ்டர் (Credits - @wunderbarfilms X account)

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவர். தற்போது தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் வெற்றி வாகை சூடி வருகிறார். ஏற்கனவே சிறந்த நடிகர் என பெயர் பெற்று தேசிய விருதுகளை பெற்றுள்ள தனுஷ், தற்போது இயக்குநராகவும் கலக்கி வருகிறார். தனுஷ் இயக்கத்தில் முதல்முறையாக வெளியான திரைப்படம் 'பவர் பாண்டி'.

இந்த படத்தில் தனுஷுடன் ராஜ்கிரண், ரேவதி, மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, தனது 50வது படமாக 'ராயன்' படத்தை இயக்கினார். இப்படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.

இதனையடுத்து தனுஷ் மூன்றாவதாக 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என்ற படத்தை இயக்கியுள்ளார். ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் மேத்யூ தாமஸ், அனிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை தனுஷின் ஒண்டர்பார் (Wunderbar films) நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த மோஷன் போஸ்டரில் தலைப்பிற்கு கீழ் 'வழக்கமான காதல் கதை' என்ற டேக் லைன் கவனத்தை ஈர்த்தது. இப்படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள் உள்ளதாகவும், எந்த பாடலை முதலில் ரிலீஸ் செய்வது என்று தெரியவில்லை என இசையமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இப்படத்தில் இருந்து 'கோல்டன் ஸ்பாரோ' (golden sparrow) என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் பாடலில் நடிகை பிரியங்கா மோகன் சிறப்புத் தோற்றத்தில் நடனம் ஆடியுள்ளார். அறிவு எழுதியுள்ள இந்தப் பாடலை சுப்லக்ஷினி, ஜீ.வி. பிரகாஷ் குமார், தனுஷ், அறிவு உள்ளிட்டோர் பாடியுள்ளனர். இந்த பாடல் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த தங்கலான்! - thangalaan 100 crore

ABOUT THE AUTHOR

...view details