தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

மகளின் பெயரை அறிவித்த தீபிகா - ரன்வீர் தம்பதி! - RANVEER SINGH DAUGHTER NAME

தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தைக்கு சூட்டப்பட்டுள்ள பெயர் மற்றும் முதல் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

Deepika Padukone - Ranveer Singh Daughter's name
தீபிகா படுகோனே ரன்வீர் சிங் தம்பதி (Photo Credits - PTI)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 2, 2024, 12:37 PM IST

ஹைதராபாத்: பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே, கடந்த 2018ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து பல ஆண்டுகளுக்கு பிறகு தீபிகா படுகோனே கர்ப்பமானார்.

இந்த நிலையில், தீபிகா படுகோனே தான் நிறைமாத கர்ப்ப காலத்தில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. அதன் தொடர்ச்சியாக, செப்டம்பர் 9ஆம் தேதி அன்று தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.

தீபாவளியை முன்னிட்டு தங்களது பெண் குழந்தையின் முதல் புகைப்படத்தையும், அந்த குழந்தைக்கு சூட்டப்பட்டுள்ள பெயரையும் தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் தம்பதியினர் முதன்முறையாக தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

இதையும் படிங்க:சிவகார்த்திகேயனின் பாக்ஸ் ஆபிஸ் வேட்டை.. ஒரே நாளில் ரூ.50 கோடியை நெருங்கிய வசூல்!

அந்த பதிவில், "துவா என்றால் பிரார்த்தனை என்று அர்த்தம். ஏனென்றால் எங்கள் பிரார்த்தனைகளுக்கான பதில் அவள். எங்கள் இதயம் முழுவதும் அன்பும் நன்றியுணர்வும் நிரம்பியுள்ளது" என்று குறிப்பிட்டு, தங்களது குழந்தையினுடைய பாதத்தின் புகைப்படத்தை பதிவிட்டுள்ள தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் தம்பதியர், தங்களுக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு 'துவா படுகோனே சிங்' (Dua Padukone Singh) என பெயர் சூட்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த பதிவு மில்லியன் கணக்கான லைக்குகளையும், கமண்ட்ஸ்களையும் பெற்றுள்ளது. அதுமட்டும் அல்லாது, ஷூஜித் சிர்கார், அலியா பட், பிரியங்கா சோப்ரா, கரண் ஜோஹர் உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் தம்பதிக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details