ஹைதராபாத்: இந்தியாவில் வண்ணமயமான ஹோலி பண்டிகை இன்று (மார்ச்.25) கொண்டாடப்படுகிறது. ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. பனிக்காலம் காலம் முடிந்து வெயில் காலம் வருவதை வசந்த காலம் என்று கூறப்படும். அப்போது கால மாற்றம் காரணமாகப் பொதுமக்களுக்குப் பல நோய்கள் ஏற்படும். இதை எதிர்கொள்ளும் விதமாக ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, ஹோலி பண்டிகையின் முதல் நாள் இரவு அக்னி தேவனுக்கு பூஜை செய்யும் விதமாக வீட்டு வாசலில் மரக்கட்டைகளை வைத்து எரித்து பூஜை செய்கின்றனர். இந்த நிகழ்வுக்கு ஹோலிகா தகனம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் பக்த பிரகலாதன் உயிர்பெற்று எழுந்ததையும் ஹோலி பண்டிகையாக கொண்டாடுகின்றனர்.
வட இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ஹோலி பண்டிகை கொண்டாடுகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஹோலி பண்டிகையில் கலர் பொடிகளைத் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மீது தூவி விளையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தென் இந்தியாவில் சென்னையில் சில இடங்களில் ஹோலி பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.