தமிழ்நாடு

tamil nadu

30 அடி பிரம்மாண்ட போஸ்டருடன் வெளியான பிக்பாஸ் ராஜுவின் ஃபர்ஸ்ட் லுக்! - Bun butter jam first look

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 9, 2024, 2:58 PM IST

Bun Butter Jam first look: பிக்பாஸ் ராஜூ கதாநாயகனாக நடித்துள்ள 'பன் பட்டர் ஜாம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 30 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டு, சென்னையில் வெளியிடப்பட்டுள்ளது.

பன் பட்டர் ஜாம் ஃபர்ஸ்ட் லுக்
பன் பட்டர் ஜாம் ஃபர்ஸ்ட் லுக் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: முன்னதாக ஒரு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் செய்தித்தாள்களில் வெளியானது. பின்னர் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டது. ஆனால், வழக்கத்திற்கு மாறாக 'பன் பட்டர் ஜாம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், 30 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டு, சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் வெளியிடப்பட்டது ரசிகர்களுக்கு புதுமையாக இருந்தது.

‘காலங்களில் அவள் வசந்தம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ராகவ் மிர்தாத், "பன் பட்டர் ஜாம்" படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் கதாநாயகனாக பிக் பாஸ் புகழ் ராஜூ நடித்துள்ளார். வழக்கமான போஸ்டர் பாணியில் இல்லாமல், முழுவதும் கைகளாலேயே வரைந்து இந்த போஸ்டரை வடிவமைத்துள்ளனர். மேலும், போஸ்டரைச் சுற்றி பல்வேறு கால கட்டத்தில், உலக வரலாற்றில் நடந்த போர் காட்சிகளைப் போல், படத்தின் நாயகன் ராஜு அமர்ந்து “பன் பட்டர் ஜாம்” சாப்பிடுவது போல் வரைந்துள்ளனர்.

இப்படத்தில் ஆத்யா பிரசாத் மற்றும் பவ்யா திரிகா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும், துணை கதாபாத்திரங்களில் சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி ஆகிய நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர். அதேபோல், நடிகர் சார்லியின் கதாபாத்திரம் அவரின் அடுத்த மைல் கல்லாக இருக்கும் என படக்குழுவினர் கூறுகின்றனர்.

பன் பட்டர் ஜாம் படத்தை Rain Of Arrows Entertainment சார்பில் சுரேஷ் சுப்ரமணியன் தயாரித்துள்ளார். அழகான டிராமாவாக உருவாகியுள்ள "பன் பட்டர் ஜாம்" படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெற்றது. இதனையடுத்து, தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க:"இன்றைய தேதிக்கு இவன் தான் சூப்பர்ஸ்டார்"..அருண் விஜயின் 'வணங்கான்' ட்ரெய்லர் வெளியானது! - Vanangaan trailer released

ABOUT THE AUTHOR

...view details