சென்னை: தமிழில் கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 8வது சீசனாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியை ஆரம்பம் முதலே நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த இரண்டு வாரங்களாக விஜய் சேதுபதி நிகழ்ச்சியை நடத்திய விதம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த சீசனில் பவித்ரா, தீபக், முத்துக்குமரன், ஆர்ஜே ஆனந்தி, சுனிதா உள்ளிட்ட பதினெட்டு பேர் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர்.
அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கிய இந்த பிக்பாஸ் சீசனில் இதுவரை ரவீந்தர் மற்றும் ஆர்னவ் ஆகியோர் பிக்பாஸ் வீட்டை வெட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். மகாராஜா படத்தில் விஜய் சேதுபதி மகளாக நடித்த சாச்சனா போட்டியில் பங்கேற்ற முதல் 24 மணி நேரத்திலேயே எலிமினேட் செய்யப்பட்டார். பின்னர் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் மீண்டும் உள்ளே நுழைந்தார். தற்போது ஆட்டம் மேலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஒவ்வொரு பிக்பாஸ் சீசனிலும் போட்டியின் சுவாரஸ்யயத்தை மேலும் அதிகரிக்க வைல்டு கார்டு என்ட்ரி மூலம் புதிய போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்படுவது வழக்கம். இந்த முறை தீபாவளிக்கு முன்பு ஒரு சில போட்டியாளர்கள் உள்ள போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதில் எலிமினேட் ஆன ஆர்னவின் மனைவி திவ்யா உள்ளே போகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.