சென்னை: தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் புதிய இசையமைப்பாளர்கள் கவனம் பெற்று வருகின்றனர். பிரபல இசையமைப்பாளர்கள் ஏ.ஆர். ரகுமான், அனிருத் என பலர் சுயாதீன ஆல்பங்களை (Independent albums) உருவாக்கியுள்ளனர். அனிருத் உருவாக்கிய எனக்கென யாரும் இல்லையே (Enakena yaarum illaye), சென்னை சான்ஸே இல்ல (Chennai chancea illa) ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அந்த வகையில் இந்த ஆண்டு பால் டப்பா (paal dabba), அசல் கோலார் (asal kolaar), சாய் அபயங்கர், OfRo என பல இளம் இசையமைப்பாளர் தங்கள் திறமையை நிரூபித்துள்ளனர். இந்த ஆண்டு ரசிகர்களை ஈர்த்த சிறந்த சுயாதீன ஆல்பங்கள் குறித்து பார்க்கலாம்.
காத்து மேல பாடல் (Kathu mela): அனிஷ் என இயற்பெயர் கொண்ட பால் டப்பா எழுதி நடித்த பாடல் 'காத்து மேல'. இப்பாடலுக்கு OfRo என்பவர் இசையமைத்துள்ளார். இப்பாடல் குழந்தைகள் மத்தியில் அதிகமாக பிரபலமானது. மேலும் சமூக வலைதளத்தில் மீம்ஸ்களில் அதிகமாக பயன்படுத்தப்பட்டது. 'காத்து மேல' பாடல் யூடியூபில் இதுவரை 58 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
ஆச கூட பாடல் (Aasa kooda): இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ஆல்பம் ‘Aasa kooda’ பாடல். இதுவரை aasa kooda ஆல்பம் பாடல் யூடியூபில் 180 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. மேலும் இந்த பாடலை பாடிய சாய் ஸ்மிருதியின் குரலை ரசிகர்கள் அதிகளவில் பாராட்டினர். இந்த ஆல்பம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தற்போது லோகேஷ் கனகராஜ் தயாரித்து வரும் ’பென்ஸ்’, ’சூர்யா 45’ ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.