சென்னை: பிக்பாஸ் வீட்டில் இந்த வார டாஸ்கில் பெண்கள் அணியினர் வெற்றி பெற்றனர். பால் கேமில் சிவக்குமார் செய்த தவறால் ஆண்கள் அணியினர் வெற்றி வாய்ப்பை இழந்தனர். பிக்பாஸ் ஒவ்வொரு சீசனிலும் பள்ளி டாஸ்க் வைக்கப்படும். அந்த வகையில் நேற்று பிக்பாஸ் வீடு ஹாஸ்டலுடன் கூடிய ரெஸிடென்ஷியல் பள்ளியாக மாறியது.
அதில் வர்ஷினி பள்ளி தலைமை ஆசிரியராகவும், அருண் துணை தலைமை ஆசிரியராகவும், ஜாக்குலின் சமூக அறிவியல் ஆசிரியையாகவும், மஞ்சரி தமிழ் ஆசிரியையாகவும், ஜெஃப்ரி உடற்பயிற்சி கல்வி ஆசிரியராகவும் இருந்தனர். மற்ற போட்டியாளர்கள் மாணவர்களாக இருந்தனர்.
இதில் வர்ஷினி தனது கணவர் அருணை பிரிந்து வாழ்பவராகவும், அருண் அவரிடம் சேர்ந்து வாழ முயலும் கதாபாத்திரமாக இருக்கும்படி பிக்பாஸ் கூறியிருந்தார். வகுப்பில் கலாட்டா செய்து படிக்காமல் சுற்றும் மாணவனாக சத்யா இருந்தார். இந்த பிக்பாஸ் பள்ளி டாஸ்கில் அருண், வர்ஷினி ஆகியோருக்கு வேஷம் நன்றாக பொருந்தியது. அருண், வர்ஷினியிடம் டாஸ்கில் காதனை வெளிப்படுத்திய விதம் பார்வையாளர்களை கவர்ந்தது.
இந்நிலையில் பள்ளி டாஸ்கில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சமைத்து தர வேண்டும் என்று உத்தரவிட்டதால் எப்போதும் பிக்பாஸ் வீட்டில் சமைக்க வேண்டிய ஆட்களில் குழப்பம் ஏற்பட்டது. இதில் மஞ்சரி, அருண் இடையே மோதல் ஏற்பட்டது. மேலும் வர்ஷினி ஸ்ட்ரிக்ட் தலைமை ஆசிரியராக மற்ற ஆசிரியரிடமும், மாணவர்களிடமும் நடந்து கொண்டார். சென்ற வாரம் பிக்பாஸ் வீட்டில் இருக்கின்ற இடமே தெரியாத போட்டியாளராக இருந்த வர்ஷினி இந்த வாரம் ஓரளவு கவனம் பெற்ற போட்டியாளராக வலம் வருகிறார். பள்ளி டாஸ்க் மூலம் அருணும் நெட்டிசன்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: விஜய் சேதுபதி மகனின் 'பீனிக்ஸ்' ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு - படக்குழு அறிவிப்பு!
இதனிடையே வகுப்பில் மிகவும் நன்றாக படிகும் மாணவியாக சாச்சனா, நியூட்டன்ஸ் விதியை தவறாக சொல்லி தலைமை ஆசிரியை வர்ஷினியிடம் பல்பு வாங்கினார். இதனைத்தொடர்ந்து ரானவ் தன்னை மற்ற போட்டியாளர்கள் அலட்சியப்படுத்துவதாகவும், அருணிடம் புலம்பிக் கொண்டிருந்தார். முன்னதாக அன்ஷிதாவிற்கும், ரானவிற்கும் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் பிக்பாஸ் ஸ்கூல் டாஸ்க் இன்று என்ன சுவாரஸ்யமான சம்பவங்கள் நிகழும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்