சென்னை: தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் வில்லனாக நடித்து பிரபலமானவர் நடிகர் சோனு சூட். தமிழில் சந்திரமுகிஒ, ஒஸ்தி, தேவி ஹிந்தியில் ஜோதா அக்பர் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அருந்ததி திரைப்படத்தில் இவரது பீதி கிளப்பும் வில்லத்தனத்தை எளிதில் மறக்க முடியாது.
இப்படி பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் கொரோனா தொற்று லாக்டௌன் காலத்தில் அவர் மேற்கொண்ட மனிதாபிமான உதவிகள் மூலம் சோனு சூட் நாடு முழுவதும் பிரபலமானார். புலம்பெயர் தொழிலாளர்களுக்கான பயண வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்தார். இதனால் அவரை அவர் பிறந்த மாநிலமான பஞ்சாப் மாநிலத்தின் ஐகானாக அவர் போற்றப்பட்டார்.
இந்நிலையில் 10 இலட்ச ரூபாய் மோசடி வழக்கில் சோனு சூட்டை கைது செய்ய, பஞ்சாப்பின் லூதியான நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. லூதியானா நீதிமன்ற மாஜிஸ்திரேட் ராமன்பிரீத் கவுர் இந்த வாரண்டை பிறப்பித்துள்ளார். லூதியானாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ் கன்னா, மோஹித் சுக்லா என்பவருக்கு எதிராக 10 லட்சம் ரூபாய் மோசடி வழக்கைத் தொடர்ந்தார்.
அதில், மோஹித் சுகலா தொடர்புடைய ரிஜிகா நாணய நிறுவனத்தில் (Rijika coin company) முதலீடு செய்ய தூண்டியது நடிகர் சோனு சூட் தான் என அவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராக பல முறை சம்மன் அளிக்கப்பட்டும் சோனு சூட் ஆஜராகவில்லை. அதனால் அவருக்கு எதிராக நீதிமன்றம் இந்த கைது வாரண்ட்டைப் பிறப்பித்துள்ளது.
லூதியானா நீதிமன்றம் பிறப்பித்த கைது வாரண்ட் உத்தரவில், மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள ஓஷிவாரா காவல் நிலைய அதிகாரிக்கு சோனு சூட்டை கைது செய்ய உத்தரவிட்டது. அதில், ”சோனு சூட்டிற்கு முறையாக சம்மன்(கள்) அல்லது வாரண்ட்(கள்) அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அவர் ஆஜராகத் தவறிவிட்டார். எனவே சோனு சூட்டைக் கைது செய்து நீதிமன்றத்தின் முன் ஆஜர் செய்ய உத்தரவிடப்படுகிறது.