தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நான் ஆஸ்கர் விருது வென்றதை தற்போது எவரும் கண்டு கொள்வதில்லை... மனம் திறந்த ஏ.ஆர்.ரஹ்மான்! - AR RAHMAN ABOUT HIS OSCARS

AR Rahman About His Oscars: பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ஆஸ்கர் விருது குறித்தும், தனது எதிர்கால திரைப்படங்கள் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.

ஆஸ்கர் விருது குறித்து பேசிய ஏ.ஆர்.ரஹ்மான்
ஆஸ்கர் விருது குறித்து பேசிய ஏ.ஆர்.ரஹ்மான் (Credits - ETV Bharat, ANI)

By ETV Bharat Entertainment Team

Published : Oct 21, 2024, 1:59 PM IST

ஹைதராபாத்: தான் ஆஸ்கர் விருது வென்றதை தற்போது எவரும் கண்டு கொள்வதில்லை, இனி தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார். பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் இசையமைத்து வருகிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் தனியார் ஆங்கில செய்தித்தாளுக்கு தனது எதிர்காலம் குறித்து பேசுகையில், “எனக்கு மகிழ்ச்சி மற்றும் மன நிறைவு தரும் படத்திற்கு மட்டும் தான் இசையமைத்து வருகிறேன். இனி என்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன். எனது படைப்பாற்றலை வளர்க்கும் விதமாக படத்தை தேர்வு செய்து இசையமைத்து வருகிறேன் என்றார்.

மேலும் ஆஸ்கர் விருது குறித்து பேசுகையில், "நான் 2007ஆம் ஆண்டு slumdog millionaire படத்தில் jai Ho பாடலுக்காக ஆஸ்கர் விருது வென்றேன். ஆனால் தற்போது எவரும் அதைப் பற்றி கண்டு கொள்வதில்லை. எதிர்கால தலைமுறையை ஊக்குவிக்கும் வகையிலான படங்களுக்கு இசையமைத்து வருகிறேன்" எனக் கூறியுள்ளார். சில மாதங்களுக்கு ஒரு நேர்கானலில் ஏ.ஆர்.ரஹ்மான் தான் வென்ற ஆஸ்கர் விருது வீட்டில் எங்கு இருக்கிறது என தெரியவில்லை என நகைச்சுவையாக கூறினார்.

இதையும் படிங்க: பிக்பாஸ் வீட்டில் இடம் மாறிய இளசுகள்... விறுவிறுப்பான ப்ரோமோ வெளியீடு!

தற்போது ஏ.ஆர். ரஹ்மான் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப், ஜெயம் ரவி நடிப்பில் ஜெனி, காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களுக்கும், தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் படத்திற்கும் இசையமைத்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கடைசியாக வெளியான ஆடுஜீவிதம், ராயன் பட பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details