சென்னை: தனது தந்தையை பற்றி அவதூறு கருத்துக்களை பரப்ப வேண்டாம் என ஏ.ஆர்.ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீன் பதிவிட்டுள்ளார். பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்வதாக இரண்டு நாட்களுக்கு முன் அறிவித்தார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி தொடங்கி உலக மொழிகளில் பல்வேறு பாடல்களுக்கு இசையமைத்து இசை உலகில் உச்சத்தில் இருப்பவர் ஏ.ஆர்.ரகுமான்.
‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருது வென்றுள்ள ஏ.ஆர்.ரகுமான் செய்யாத சாதனைகளே இல்லை என கூறலாம். இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான், அவரது மனைவி சாய்ரா பானு ஆகியோருக்கு 2 மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர். இதனைத்தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன் ஏ.ஆர்.ரகுமான், சாய்ரா பானு ஜோடி திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்தனர்.
இந்த அறிவிப்பு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருவரும் 29 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் பிரிவதாக அறிவித்தனர். மேலும் இந்த சமயத்தில் தங்கள் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு பதிவிட்டிருந்தார். இதனிடையே ஏ.ஆர்.ரகுமானிடம் பணிபுரிந்த இசைக் கலைஞர் மோகினி டே தனது கணவர் மார்ஷ் ஹார்ட்சச்சும்-ஐ பிரிவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் சமூக வலைதளத்தில் ஏ.ஆர்.ரகுமான் விவாகரத்து குறித்து தவறான கருத்துக்கள பரவியது.