சென்னை:நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகுச் சிலை, துபாயில் உள்ள மாடம் டுசாட்ஸ் மியூசியத்தில் நிறுவப்பட்டுள்ளது. பிரபல நடிகர் அல்லு அர்ஜூனை கௌரவிக்கும் வகையில், இந்த மெழுகுச் சிலை நிறுவப்பட்டுள்ளது. அல்லு அர்ஜூனின் மெழுகுச் சிலை அவரது பிரபல திரைப்படம் புஷ்பா பட போஸில் உள்ளது.
துபாயில் நடைபெற்ற இந்த சிலை திறப்பு விழாவில், நடிகர் அல்லு அர்ஜுன் தனது குடும்படுத்தினருடன் பங்கேற்றார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அல்லு அர்ஜுன் மனைவி, மகிழ்ச்சியில் தனது கணவருக்கு முத்தமிட்டு மகிழ்ந்தார். இது குறித்து அல்லு அர்ஜுன் மனைவி சினேகா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.