தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

இந்திய அளவில் 1000 கோடியை நெருங்கும் 'புஷ்பா 2'; உலக அளவில் 1,409 கோடி இமாலய வசூல்! - PUSHPA 2 COLLECTIONS

Pushpa 2 worldwide collections: அல்லு அர்ஜூன் நடித்த 'புஷ்பா 2' திரைப்படம் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வெளியான நிலையில், உலக அளவில் இதுவரை 1,409 கோடி வசூல் செய்துள்ளது.

புஷ்பா 2 அல்லு அர்ஜூன்
புஷ்பா 2 அல்லு அர்ஜூன் (Photo: Film poster)

By ETV Bharat Entertainment Team

Published : 5 hours ago

ஹைதராபாத்: 'புஷ்பா 2' திரைப்படம் தியேட்டர்களில் வெளியான போது புஷ்பா முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு போல இரண்டாம் பாகமும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது 'புஷ்பா 2' திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் வசூல் சாதனை படைத்து வருகிறது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 5ஆம் தேதி பிரமாண்டமாக வெளியானது 'புஷ்பா 2'.

பிரபல சினிமா இணையதளம் சாக்னில்க் வெளியிட்டுள்ள வசூல் கணக்கின் படி, 'புஷ்பா 2' முதல் வாரத்தில் இந்தியா அளவில் 725.8 கோடி வசூல் செய்தது. தற்போது புஷ்பா 2 திரைப்படம் வெளியாகி 2 வாரங்கள் ஆன நிலையில், இன்று 12வது நாளில் இதுவரை 27.75 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புஷ்பா 2 தற்போது வரை இந்திய அளவில் மொத்தமாக 929.85 கோடி வசூல் செய்துள்ளது.

தெலுங்கு மொழியில் இதுவரை 287.05 கோடியும், ஹிந்தி மொழியில் அதிகபட்சமாக 573.1 கோடியும், தமிழ், மலையாளம், மற்றும் கன்னட மொழி சேர்த்து 69.7 கோடியும் வசூல் செய்துள்ளது. இந்திய அளவில் அதிக திரைகளில் வெளியான புஷ்பா 2 திரைப்படம், இந்தியா மட்டுமின்றி உலக பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்து வருகிறது.

Day/Week India Net Collection
Week 1 Rs 725.8 Cr
Day 9 Rs 36.4 Cr
Day 10 Rs 63.3 Cr
Day 11 Rs 76.6 Cr
Day 12 Rs 27.75 Cr (Early estimates)
Total Rs 929.85 Cr

'புஷ்பா 2’ உலக அளவில் 1400 கோடி

'புஷ்பா 2' திரைப்படம் வெளியாகி 11ஆவது நாளான நேற்று (டிச.,16) வரை உலக அளவில் 1409 கோடி வசூல் செய்து, ஆர். ஆர்.ஆர் வாழ்நாள் வசூல் (1,230 கோடி) மற்றும் கேஜிஎஃப் 2 (1,215) கோடியும் வசூல் செய்துள்ளது. இது மட்டுமின்றி உலக அளவில் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படங்கள் மூன்றாவது இடத்தில் புஷ்பா 2 உள்ளது. முதல் இடத்தில் அமீர்கான் நடித்த டங்கல் (2,070 கோடி) திரைப்படமும், இரண்டாவது இடத்தில் பாகுபலி 2 (1,790 கோடி) திரைப்படமும் இடம்பிடித்துள்ளது.

தென்னிந்தியாவில் குறைந்த ’புஷ்பா 2’ வசூல்

வரும் நாட்களில் தமிழில் விஜய் சேதுபதி நடித்த 'விடுதலை 2', பாலிவுட்டில் வருண் தவான் நடிப்பில் தெறி படம் ரீமேக்கான ’பேபி ஜான்’ (baby john) மற்றும் லயன் கிங் முஃபாசா (Lion king - mufasa) ஆகிய படங்கள் புஷ்பா 2 திரைப்படத்திற்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. புஷ்பா 2 திரைப்படம் இந்தியாவில் மட்டுமே 1000 கோடி வசூல் செய்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஹிந்தி, தெலுங்கு தவிர தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் குறைவான வசூலையே பெற்று வருகிறது.

இதையும் படிங்க:“ஹோட்டல் விவகாரத்தில் எச்சரித்து அனுப்பினேன்”... விக்னேஷ் சிவன் சர்ச்சையில் புதுச்சேரி அமைச்சர் விளக்கம்! - MINISTER ABOUT VIGNESH SHIVAN ISSUE

முன்னதாக ஹைதராபாத் சந்தியா தியேட்டரில் புஷ்பா 2 சிறப்புக் காட்சிக்கு அல்லு அர்ஜூன் வந்த போது, அவரை காண பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்த நிலையில், அவரது மகன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து அல்லு அர்ஜூன் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு 25 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்குவதாக தெரிவித்தார். இதனையடுத்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் பதிவு செய்த வழக்கில் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

ABOUT THE AUTHOR

...view details