சென்னை:இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கும் ஆலியா பட், பெயரிடப்படாத படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் ஷர்வரி வாக்கும் இணைந்துள்ளார். திரைப்படத் தயாரிப்பாளரான ஆதித்யா சோப்ராவின் யாஷ் ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் படத்தை தயாரிக்கிறார்.
பெண்களை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் ஆலியா பட் முக்கிய கதாபாத்திரத்தில் ஏஜெண்டாக நடிக்கிறார். நடிகை ஷர்வரி வாக் துணை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தி ரயில்வே மென் படத்தை இயக்கிய ஷிவ் ரவைல் இப்படத்தையும் இயக்குகிறார்.
இதனிடையே இப்படத்தில் நடிப்பதற்காக ஷர்வரி வாக் மற்றும் ஆலியா பட் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் ஒரு படத்தில் ஆலியா தனது ஜிம் உடையில் ஒரு பெண்ணுடன் போஸ் கொடுப்பது போல் உள்ளது. மற்றொரு படத்தில் அதே பெண்ணுடன் ஷர்வரி ஜிம் உடைகளை அணிந்து சண்டை போஸ் கொடுப்பது போல் உள்ளது.
இந்த புகைப்படத்தை எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்ட நபர், ஆலியாவும், ஷர்வரியும் YRF படத்திற்காக தனது பயிற்சியை தொடங்கியதாகத் தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ளார். முழு ஆக்ஷன் படமான இப்படத்தில் வில்லனாக பாலி தியோல் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், இவ்வாண்டின் இறுதியில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் தலைப்பு, வெளியீட்டு தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
இதையும் படிங்க:"தமிழில் குழந்தைகளுக்கான படங்கள் வருவதில்லை" - குரங்கு பெடல் நிகழ்வில் எழுத்தாளர் பிரம்மா பேச்சு! - Kurangu Pedal Movie Release