தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நாளை மாலை 7.03 மணிக்கு.. விடாமுயற்சி அப்டேட் என்ன? - vidaamuyarchi movie update - VIDAAMUYARCHI MOVIE UPDATE

Vidaamuyarchi movie update: நடிகர் அஜித்குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் அப்டேட் நாளை மாலை 7.03 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடாமுயற்சி போஸ்டர்
விடாமுயற்சி போஸ்டர் (credits - Magizh Thirumeni X Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 29, 2024, 3:13 PM IST

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். இதில் குட் பேட் அக்லி (Good bad ugly) அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

ஆனால், விடாமுயற்சி திரைப்படம் எப்போது வெளியாகும் என எந்தவித அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. லைகா நிறுவனம் தயாரிக்கும் விடாமுயற்சி படத்தை, மகிழ் திருமேனி இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாக அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் நீண்ட நாட்களாக எடுக்கப்பட்டு வருவதால், அஜித்குமார் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கி முதற்கட்ட படப்பிடிப்பையும் முடிந்துவிட்டார். தற்போது விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அசர்பைஜானின் மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது. வழக்கமாக அஜித் ஒரு படத்தை முடித்துவிட்டுதான், தனது அடுத்த படத்தை தொடங்குவார். ஆனால், இம்முறை விடாமுயற்சி தாமதமானதால் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், விடாமுயற்சி படத்தை இந்தாண்டு தீபாவளிக்கு வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் அப்டேட் நாளை (ஜூன் 30) மாலை 7.03 மணிக்கு வெளியாகும் என்று படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி மற்றும் அஜித்தின் மேலாளர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

அந்த அப்டேட் விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் குட் பேட் அக்லி படத்தின் செகண்ட் லுக் வெளியாகி அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. தற்போது நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக்கும் நாளை வெளியாக உள்ளதால் அஜித் ரசிகர்கள் மிகுந்த குஷியில் உள்ளனர்.

இதையும் படிங்க:மீண்டும் ஜாலி கேரக்டரில் அஜித்.. குட் பேட் அக்லி செகண்ட் லுக் வெளியானது! - Good bad ugly Second look

ABOUT THE AUTHOR

...view details