சென்னை:இயக்குநர் ராஜேஷ் காமெடி திரைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமான இயக்குநராக அறியப்படுகிறார். இவரது சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய படங்கள் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. ஆனால், அதனைத் தொடர்ந்து இவர் இயக்கிய படங்கள் போதிய வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில், தற்போது ஜெயம் ரவி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். அதனைத் தொடர்ந்து ஸ்ரீ வாரி பிலிம் பி.ரங்கநாதன் தயாரிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார். நியூ ஏஜ் எண்டர்டெயினராக உருவாகும் இப்படத்தில், நடிகர் அதர்வா முரளி மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் நடிக்கின்றனர். தற்காலிகமாக இந்த படத்திற்கு 'புரொடக்ஷன் நம்பர் 5' என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார் மற்றும் ஒளிப்பதிவை சுகுமாரன் கையாள்கிறார்.
படம் குறித்து நடிகர் அதர்வா முரளி கூறும்போது, “திரையுலகில் மிகுந்த அனுபவம் கொண்ட பி.ரங்கநாதன் போன்ற சிறந்த தயாரிப்பாளருடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். தரமான பொழுதுபோக்கு கதைகளைத் தேர்ந்தெடுப்பதிலும், ஊக்குவிப்பதிலும், அதற்காக செலவு செய்வதிலும் அவருடைய ஈடுபாடு அபாரமானது.
இயக்குநர் ராஜேஷின் திரைக்கதைக்கு, இவர் தயாரிப்பு செய்து, அதில் நான் நடிப்பது பெருமையான விஷயம். முழுக்க முழுக்க எண்டர்டெய்ன்மெண்ட் படங்களை எதிர்பார்த்து திரையரங்குகளுக்கு வருபவர்களை இந்த படம் நிச்சயம் ஏமாற்றாது" என்றார். இயக்குநர் எம்.ராஜேஷ் கூறும்போது, “காலத்திற்கு ஏற்றாற் போல, சினிமாவின் ஒவ்வொரு ஜானரிலும் மாற்றம் ஏற்படும்.
இதையும் படிங்க:ஹாலிவுட்டில் ரீமேக்காகும் "த்ரிஷ்யம்" படம் - முதல் இந்திய படம் என சிறப்பு!