தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

மும்பை தொழிலதிபரை கரம் பிடிக்கும் வரலட்சுமி சரத்குமார்; வைரலாகும் நிச்சயதார்த்தப் புகைப்படங்கள்! - வரலட்சுமி சரத்குமார் நிச்சயம்

Actress Varalakshmi: நடிகர் சரத்குமார் மகளும் நடிகையுமான வரலட்சுமிக்கும், மும்பை தொழிலதிபர் நிகோலய் சச்தேவுக்கும் மும்பையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

மும்பை தொழிலதிபரை கரம் பிடிக்கும் வரலட்சுமி சரத்குமார்
மும்பை தொழிலதிபரை கரம் பிடிக்கும் வரலட்சுமி சரத்குமார்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 2, 2024, 8:32 PM IST

சென்னை: நடிகர் சரத்குமார் மகள் வரலட்சுமி சரத்குமார், விக்னேஷ் சிவன் இயக்குநராக அறிமுகமான போடா போடி என்ற படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சண்டைக்கோழி 2, மாரி 2, சர்கார் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பாலா இயக்கத்தில் சசிகுமார் நடித்து இளையராஜாவின் 1000வது படமாக வெளியான தாரை தப்பட்டை படத்தில் வரலட்சுமி கதாபாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றது. பின்னர் தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடிக்கத் தொடங்கினார்.

பாலகிருஷ்ணா நடித்த வீர சிம்மா ரெட்டி, கொன்றால் பாவம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் தெலுங்கில் நடித்த அனுமன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது தனுஷ் இயக்கி நடிக்கும் அவரது 50வது படமான ராயனில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவரது கதாபாத்திரம் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

மும்பை தொழிலதிபரை கரம் பிடிக்கும் நடிகை வரலட்சுமி

இந்நிலையில் நீண்ட வருடங்களாகத் திருமணம் பற்றிப் பேசாமல் இருந்து வந்த வரலட்சுமி தற்போது திருமணத்திற்குத் தயாராகி உள்ளார். இவருக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிகோலய் சச்தேவுக்கும் இரு வீட்டார் பெற்றோர்கள்‌, நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இருவரும் கூடிய விரைவில் திருமணத் தேதியை அறிவிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை தொழிலதிபரை கரம் பிடிக்கும் நடிகை வரலட்சுமி

வரலட்சுமி நிச்சயதார்த்த நிகழ்வின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகை வரலட்சுமிக்கு திரைத்துறையைச் சேர்ந்த பலர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மும்பை தொழிலதிபரை கரம் பிடிக்கும் நடிகை வரலட்சுமி

இதையும் படிங்க: கர்நாடக இசை அனைத்துச் சமுதாயத்தினருக்கும் சமமானது, எந்தவித வேறுபாடும் கிடையாது - கிராமி விருது வென்ற செல்வகணேஷ்

ABOUT THE AUTHOR

...view details