சென்னை: பிரபல நடிகை சாய் பல்லவி தன்னை பற்றி வதந்திகளை பரப்பும் ஊடகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். பிரபல நடிகை சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர். அவர் இந்த வருடம் சிவகார்த்திகேயனுடன் நடித்த ’அமரன்’ திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றார்.
தற்போது மேலும் பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சாய் பல்லவி பாலிவுட்டில் ’ராமாயணா’ புராணக் கதையில் சீதையாக நடிக்கவுள்ளார். அந்த படத்தில் ராமராக ரன்பீர் கபூரும், ராவணனாக நடிகர் யாஷும் நடிக்கின்றனர். இந்நிலையில் சாய் பல்லவி குறித்து தனியார் ஊடகம் வெளியிட்ட பதிவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகம் வெளியிட்ட பதிவில், “பாலிவுட்டில் ராமாயணம் படத்தில் இப்போது நடித்து வருகிறார் சாய் பல்லவி. அதற்காக, படப்பிடிப்பு முடியும் வரை அசைவ உணவுகள் எதையும் தொடுவதில்லை என உறுதி எடுத்திருக்கிறார். எனவே, ஹோட்டலில் கூட சாப்பிடாமல், வெளியூர்களுக்குச் செல்லும் போது கையோடு சமையல்காரர்களை அழைத்து செல்கிறார். அவர்கள் சைவமாகச் சமைத்து கொடுக்கிறார்கள்” என கூறியுள்ளனர்.